
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் பழ வகைகளை அதிகமாக உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் மாதுளம் பழத்தை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் பல அற்புதமான மாற்றங்களை பெற முடியும். அப்படி மாதுளம் பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி போடாமல் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் முகப்பொலிவிற்கும் அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் மாதுளம் பழத்தோலை வைத்து முகத்தை எப்படி அழகு செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
மாதுளம் பழத்தூளில் விட்டமின் சி, விட்டமின் கே, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பொடியை பயன்படுத்தும் பொழுது நம் முகம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் திகழும். மேலும் முக வறட்சி என்பது முற்றிலும் நீக்கப்படும். முகத்திற்கு நல்ல நிறத்தை தரும். ஏற்கனவே இருக்கும் முகப்பருக்கள் நீங்குவதோடு புதிதாக முகப்பருக்கள் ஏதும் வராமல் தடுக்கப்படும். சூரிய கதிர்களால் ஏற்படக்கூடிய முகக்கருமை நீங்கும். முகத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி முகம் இளமையான தோற்றத்தை பெறும். அதிகப்படியாக சுரக்கக்கூடிய எண்ணெய் பசை நீங்கும்.
ஒரு டம்ளரில் கால் டம்ளர் அளவிற்கு சுடுதண்ணீரை ஊற்றி கிரீன் டீ பேக்கை அதில் போட்டு நன்றாக ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு மாதுளம் பழ தோல் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு ஆரஞ்சு ஜூஸையும் சேர்த்து இதை ஒரு பேஸ்ட்டாக கலப்பதற்கு தேவையான அளவு கிரீன் டீ வாட்டரையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இந்த பேஸ்டை முகத்தில் தடவ வேண்டும். இந்த பேக்கை நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை உபயோகப்படுத்துவதன் மூலம் சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி இளமையான தோற்றத்தை பெற முடியும் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கும். முகம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் தென்படும்.
ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு மாதுளம் பழத்தோல் பொடியை சேர்க்க வேண்டும். பிறகு அதில் கால் ஸ்பூன் அளவு தயிர், கால் ஸ்பூன் அளவு தேன், கால் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். இவை நன்றாக காய்ந்த பிறகு குளிந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்கி முகத்தின் நிறம் அதிகரிக்கும். முகத்தில் இருக்கக்கூடிய சரும வறட்சிகள் அனைத்தும் நீங்கி சுருக்கம் மறைந்து இளமையாக திகழ்வோம்.
இதையும் படிக்கலாமே: வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஷாம்பு.
இனிமேலாவது மாதுளம் பழத்தோலை குப்பையில் போடாமல் காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு முகத்தின் அழகை மெருகேற்றலாம்.