- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

மகம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்

உலகில் இருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் நன்மைகளை தரும் கிரகங்களாக சூரியன் மற்றும் சந்திரன் கிரகங்கள் இருக்கின்றன. இந்த இரண்டு கிரகங்களும் கிரகண காலங்களில் மறையும் சமயங்களில் உருவாகும் நிழல்கள் தான் ராகு மற்றும் கேது வாகும். இதில் கேது கிரகம் என்பது ஒரு மனிதனின் தாய்வழிப் பாட்டனார், ஞானம் அடைதல் மற்றும் முக்தி நிலை பற்றி கூறும் கிரகமாக இருக்கிறது. அந்த கேது பகவானின் ஆதிக்கத்திற்குள்ளாக வரும் நட்சத்திரங்களில் ஒன்று தான் மகம் நட்சத்திரம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

27 நட்சத்திர வரிசைகளில் 10 வது நட்சத்திரமாக வருவது மகம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக இருப்பவர் நவகிரக நாயகர்களில் நிழல் கிரகங்களின் ஒருவரான கேது பகவான் ஆவார். மகத்தான மகம் நட்சத்திரகாரர்கள் தங்களின் வாழ்வில் மிகுதியான செல்வ சேர்க்கையும், அதிர்ஷ்டங்கள் மற்றும் யோகங்களையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை திட சித்ததோடு செய்து வந்தால் பலன்கள் நிச்சயம்.

- Advertisement -

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கீழ்ப்பெரும்பள்ளம் அருள்மிகு நாகநாதசுவாமி கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் சிவன் மற்றும் அம்பாளுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பல வண்ண நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு அக்கோயிலில் இருக்கின்ற கேது பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து, தீபமேற்றி வழிபாடு செய்வதால் உங்கள் நட்சத்திரங்களுக்குரிய தோஷங்கள் நீங்கப் பெற்று யோகமான வாழ்க்கையும், மிகுதியான பொருள் வரவும் உண்டாகும். மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு முறையான காலங்களில் சிராத்தம், திதி போன்றவற்றை அளித்து வருவதால் மகம் நட்சத்திரத்தினருக்கு தோஷங்கள் அனைத்தையும் போக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இறை ஞானத்தை வழங்கும் கிரகமான கேது பகவான் இருப்பதால் துறவிகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் போன்றவற்றை செய்வது மகம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும். மகம் நட்சத்திரத்திற்குரிய விருட்சமாக ஆலமரம் இருக்கிறது. இந்த ஆல மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று ஆலமரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபடுவதும் மேன்மையான பலன்களை தரும். வசதி வாய்ப்பு குறைந்த மக்களின் மருத்துவ செலவுக்கு உதவுவதும் மகம் நட்சத்திரத்திற்கான ஒரு சிறந்த பரிகாரம் ஆகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டி, துஷ்ட சக்திகளை போக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Magam nakshatra dosha pariharam in Tamil. It is also called Magam natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Ketu bhagavan natchathirangal in Tamil or Ketu natchathira pariharangal in Tamil.

- Advertisement -