உங்களுக்கு ஏற்படும் கண் திருஷ்டி, துஷ்ட சக்தி பாதிப்புகளை போக்கும் அற்புத பரிகாரம்

kandristi

உலகில் வாழும் உயிரினங்களில் மனிதர்களாகிய நமக்கு மட்டுமே மனம் என்கிற ஒரு சிறப்பான விடயம் இருக்கிறது. அப்படிப்பட்ட மனதில் தோன்றும் எண்ணங்கள் அவை நல்லவை அல்லது தீயவை எப்படியாக இருந்தாலும் வலிமை வாய்ந்தவையாக இருக்கின்றன. அதிலும் மனிதர்கள் பெரும்பாலானவர்கள் சக மனிதர்களின் வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டு, அவர்களின் வீழ்ச்சியை குறித்த எண்ணங்கள் தொடர்ந்து உருவாக்கும் போது, அவை அவர்கள் வெறுக்கின்ற மனிதர்களின் மீது ஒரு தாக்கத்தை செலுத்தவே செய்கின்றன. இதைத் தான் நமது முன்னோர்கள் கண்திருஷ்டி என்கின்றனர். இந்த கண் திருஷ்டி மற்றும் எதிரிகளால் ஏற்படும் பாதிப்புகளை நீக்குவதற்கான ஒரு அற்புதமான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சிலரின் வீடுகளுக்கு தீய எண்ணங்கள் சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் வந்து சென்ற பின்பு அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மனஸ்தாபம், சண்டை சச்சரவு ஏற்படுவதை பலர் உணர்ந்திருக்கின்றனர். மேலும் அக்கம் பக்கம் வாழ்பவர்கள் மற்றும் உறவினர்களின் பொறாமை, வயிற்றெரிச்சல் போன்றவை கண்ணேறு என அழைக்கப்படும் கண் திருஷ்டி ஏற்பட்டு அதன் தீய அதிர்வுகள் நமது வீட்டிற்குள் சென்று, நம்மை உடல் மற்றும் மனதளவில் பல பாதிப்புகளுக்குள்ளாக்குகிறது. இதே போன்று நமக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் நம் வாழ்வு சீரழிய செய்வினை, ஏவல் போன்ற தீய மாந்திரீக கலைகளை பயன்படுத்துகின்றனர்.

மேற்கூறிய கண்திருஷ்டி, எதிரிகள் தொல்லை, பிறரின் பொறாமை எண்ண அதிர்வுகள் போன்றவை நம் வீட்டிலிருந்து நீங்கி, நன்மையான பலன்கள் உண்டாக வியாழக்கிழமை தினத்தில் ஒரு தாம்பூலத் தட்டு நிறைய வெண்கடுகுகளை போட்டு “ஓம் தும் துர்க்காய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உரு ஜெபித்து கொள்ள வேண்டும். பின்பு வெண்கடுகு இருக்கும் தட்டை எடுத்துக்கொண்டு உங்கள் வீட்டு வாயிலில் நடுப்பகுதியில் “ஓம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை மூன்று முறை துதித்து சிறிது வெண்கடுகை அங்கு போட வேண்டும். இதுபோன்று வீட்டின் அக்னி மூலை, கன்னி மூலை, அக்னி மூலைக்கும், கன்னி மூலைக்கும் இடைப்பட்ட பகுதி, பிரம்மஸ்தானம், வாயு மூலை, வாயு மூலைக்கும் ஈசானிய முலைக்கும் நடுவான பகுதி, இறுதியில் ஈசானிய மூலை ஆகிய 8 இடங்களில் தட்டில் இருக்கின்ற வெண்கடுகுகளை மந்திரம் உரு ஜெபித்து போட வேண்டும். வீட்டின் எட்டுப் பகுதிகளிலும் போட முடியாதவர்கள் வீட்டின் நான்கு திசைகளில் மந்திரம் துதித்து வெண்கடுகுகளை போட்டு விடலாம்.

venkadugu

இந்த எளிய பரிகாரத்தை செய்த பிறகு நமக்கு நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் செய்யப்பட்ட செய்வினை மாந்திரீகம் போன்றவற்றின் பாதிப்பு உடனடியாக நீங்கும். வீட்டில் துஷ்ட சக்திகள் இருப்பின் அவை வெளியேறும். மேலும் எத்தகைய தீய சக்திகளும் வீட்டிற்குள் நுழையாதவாறு தடுக்கும். சக மனிதர்களின் கண் திருஷ்டி, பொறாமை எண்ணங்களின் அதிர்வுகளால் பாதிப்புகள் ஏற்படாமல் உங்களை காக்கும்.

இதையும் படிக்கலாமே:
உங்களின் பித்ரு தோஷம், குல சாபம் நீங்க பரிகாரம்.

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kan drishti removal in Tamil. It is also called as Kan dristi pariharam in Tamil or Theeya sakthi vilaga in Tamil or Ethirigal oliya in Tamil or Kan dristikku pariharam in Tamil.