- Advertisement -

தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாக திகழ்வதுதான் வெள்ளிக்கிழமை. அனைவரின் இல்லங்களிலும் கண்டிப்பான முறையில் வெள்ளிக்கிழமை மட்டுமாவது விளக்கேற்றி சாமி கும்பிடுவார்கள். இப்படி விளக்கேற்றி சாமி கும்பிடும்பொழுது மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பாக பூஜை செய்து வழிபாடும் செய்வார்கள். அதற்கு காரணம் வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது.

சுக்கிர பகவானுக்குரிய அதி தேவதையாக மகாலட்சுமி திகழ்வதால் வெள்ளிக்கிழமை வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளை பெற முடியும். இப்படி மகாலட்சுமியின் அருளை நாம் பெற்றுவிட்டோம் என்றால் நமக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களும் நம்மை தேடி வரும். அதனால் வெள்ளிக்கிழமை வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீட்டிற்கு வருவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

மஹாலக்ஷ்மி வீட்டுக்கு வர

வெள்ளிக்கிழமை அன்று நாம் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்கு அழைப்பதற்காக பல வழிபாடுகளையும், மந்திர ஜெபங்களையும், பாடல்களையும் உச்சரிப்போம். அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமிக்கு என்று விசேஷகரமாக பூஜைகளையும் நாம் செய்வோம். இப்படி செய்வதன் மூலமாக மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வருவாள் என்று கூறப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் பலருக்கும் அவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் நடக்காமல் கஷ்டப்படுகிறார்கள் என்று யோசித்து இருக்கிறீர்களா? காரணம் அந்த வீட்டில் எதிர்மறை சக்திகள் ஏதாவது இருக்கும்.

எதிர்மறை சக்திகள் இருந்தது என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் இருக்க மாட்டார். மகாலட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைப்பதற்கு முன்பாக எதிர்மறை ஆற்றல்களை வீட்டை விட்டு விளக்க வேண்டும். இப்படி எதிர்மறை ஆற்றல்களை விலக்க வேண்டும் என்றால் அதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது. அவற்றுள் ஒரு எளிமையான வழிமுறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாகவே வெள்ளிக்கிழமை பூஜை செய்வதாக இருந்தால் வியாழக்கிழமை வீட்டை துடைத்து விடுவோம். அவ்வாறு வீட்டை துடைக்கும் பொழுது சிறிது கல் உப்பையும் மஞ்சள் துளையும் சேர்த்து போட்டு வீட்டை துடைத்தோம் என்றால் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகும் என்று கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி பூஜை செய்வோம். இவ்வாறு நாம் விளக்கேற்றும் பொழுது காலை நேரமாக இருக்கும் பட்சத்தில் வீட்டு வாசலில் நாம் வாசல் தெளித்து கோலம் போடுவோம்.

இவ்வாறு வாசல் தெளிக்கும் பொழுது வாசல் தெளிக்கும் தண்ணீரில் சிறிது கஸ்தூரி மஞ்சள் தூளை கலந்து நாம் தெளித்து கோலம் போட்டோம் என்றால் மகாலட்சுமி தாயாரின் வாசம் என்பது ஏற்படும். இதோடு மட்டுமல்லாமல் மிகவும் முக்கியமான ஒரு தாந்திரீகமாக கருதப்படுவது என்னவென்றால் மாலை நேரத்தில் 5:30 மணிக்கு மேல் ஒரு சிறிய டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் அளவு குங்குமம் இரண்டையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது நம் வீட்டு வாசலில் நாம் கோலம் போட்டு இருப்போம் அல்லவா? அங்கு சென்று வீட்டில் இருந்தபடி அந்தக் கோலத்தின் மீது ஊற்ற வேண்டும். அந்த கோலத்தில் இந்த மஞ்சளும் குங்குமமும் கலந்த தண்ணீர் இருக்கும். இப்படி செய்துவிட்டு முகம் கை கால்களை கழுவி பிறகு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகும். மகாலட்சுமி வீடு தேடி வருவாள்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் செல்வம் கொழிக்க வைகாசி வெள்ளிக்கிழமை வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -