
வியாழக்கிழமைகளில் நாம் செய்யக்கூடிய குருபூஜை, குரு வழிபாடு நம்முடைய வாழ்க்கையை சரியான பாதையில், வழி நடத்திச் செல்லும் என்று சொல்லுவார்கள். குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் நிச்சயம் எந்த சூழ்நிலையிலும் நம்மை கைவிட மாட்டார்கள். பள்ளிக்கூடம் செல்லக்கூடிய பிள்ளைகளும் தங்களுடைய குருவின் சொல்பேச்சு கேட்டு தான் நடக்க வேண்டும்.
பாட்டு நடனம் இசைக்கருவிகளை வாசிப்பது, சிலம்பம் கற்றுக் கொள்வது இப்படி பல பயிற்சிகளுக்கு குருவே முதல் கடவுளாக திகழ்வார். இப்படி உங்களுடைய வாழ்க்கையின் குருவாக நீங்களும் யாராவது ஒரு மகானை தேர்ந்தெடுத்து, அந்த மகான் சொன்ன விதிமுறைகளை கடைப்பிடித்தாலே போதும். வாழ்க்கையில் வெற்றி நிரந்தரமாக கிடைக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கக்கூடிய மகான் வழிபாடு மகா பெரியவா வழிபாடு.
மகா பெரியவா தன்னுடைய பக்தர்களை ஒருபோதும் கஷ்டப்படுத்துவது கிடையாது. மிக மிக எளிமையான முறையில் அவருடைய பாதங்களை சரணடையும்போது, நிச்சயமாக அவரின் ஆசிர்வாதத்தை நாம் பரிபூரணமாக பெற முடியும். நம்முடைய கஷ்டத்திற்கும் உடனடியாக ஒரு தீர்வு கிடைக்கும்.
வியாழக்கிழமை தோறும் அதிகாலை வேலையிலேயே சுத்த பத்தமாக எழுந்து குளித்து முடித்துவிட்டு, மகா பெரியவா திருவுருவப்படம் சிலை வீட்டில் எது வைத்திருந்தாலும், அதை சுத்தப்படுத்தி அதற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து, பூக்களால் அலங்காரம் செய்து உங்களால் முடிந்த நெய்வேதியம் வைத்து, பெரியவா அவர்களுக்கு பூஜை செய்ய வேண்டும்.
மகா பெரியவா அவர்கள் உங்களுடைய வீட்டிற்கு வந்திருப்பதாக மனப்பூர்வமாக நினைத்து, இந்த வழிபாட்டை துவங்க வேண்டும். ஒரு வெள்ளை காகிதத்தில் உங்களுடைய வேண்டுதலை ஒரு வரியில் எழுதி மடித்து மகா பெரியவா திருவுருவப்படத்திற்கு கீழே வைத்து விடுங்கள். இது நம்முடைய திருப்திக்காக செய்யக்கூடிய ஒரு முறை தான். மற்றபடி நமக்கு என்ன துன்பம் இருக்கிறது என்பது மகா பெரியவா அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
நீங்கள் அந்த காகிதத்தில் எழுதிய வேண்டுதலை, 9 வார வியாழக் கிழமைக்குள் நிச்சயமாக பெரியவா அவர்கள் நிறைவேற்றி வைப்பார். வழக்கம் போல விளக்கு ஏற்றி தீப தூப ஆராதனைகள் காட்டி, மகா பெரியவா அவர்களுக்கு 108 போற்றிகள் இருக்கிறது. அதைப் படித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் மகா பெரியவா அவர்களை போற்றி புகழும் பாடல்கள் youtubeல் ஆயிரக்கணக்கில் இருக்கிறது.
அதில் ஏதாவது ஒன்றை ஒலிக்க விட்டு மனப்பூர்வமாக கேட்டு வேண்டுதலை சொல்லி இந்த வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இவ்வளவுதான். மிக மிக சுலபமான வழிபாடு. இது வியாழக்கிழமை அதிகாலை, இந்த வழிபாட்டை முடித்துவிட்டு, உங்களுடைய வேலையை துவங்கிப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கை நல்ல பாதையில் பயணிக்க துவங்கிவிடும். நாளைய தினம் வியாழக்கிழமை. நாளைய தினம் இந்த வழிபாட்டை துவங்கினாலும் சரிதான்.
தொடர்ந்து 9 வியாழக்கிழமைகள் மஹா பெரியவா அவர்களை வேண்டி மேல் சொன்ன பூஜையை செய்து, இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் வேண்டுதலானது நிச்சயம் ஒன்பது வார முடிவதற்குள் நடந்துவிடும். கடன் தீர வேண்டும், வருமானம் பெருக வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், திருமணம் நடக்க வேண்டும், கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும், பிள்ளைகளுடைய ஆரோக்கியம் செயல்பட வேண்டும் பிள்ளைகளுக்கு இந்த காலேஜில் இந்த பள்ளிக்கூடத்தில் சீட்டு கிடைக்க வேண்டும், என்று எந்த கோரிக்கையை வேண்டும் என்றாலும் நீங்கள் மகா பெரியவா அவர்களிடம் கேட்கலாம்.
இதையும் படிக்கலாமே: முதுமையிலும் வாழ்க்கை சிறக்க பரிகாரம்.
உங்களுக்கு எதுவுமே தெரியாதா. பூஜை எல்லாம் செய்ய முடியாதா. வியாழக்கிழமை அதிகாலை எழுந்து அமர்ந்து, மனதிற்குள் மகா பெரியவாவை நினைத்துக் கொண்டு, “ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர, மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்”, என்று 108 முறை சொல்லி விடுங்கள். மகா பெரியவா அவர்களின் பரிபூரண ஆசை உங்களுக்கு கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.