- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுதுமையிலும் வாழ்க்கை சிறக்க பரிகாரம்.

முதுமையிலும் வாழ்க்கை சிறக்க பரிகாரம்.

- Advertisement -

வாழ்க்கையில் சில விஷயங்களை யாருமே சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. காலமும் அனுபவமும் தான் நமக்கு பாடத்தை கற்றுக் கொடுக்கும். ஆனால் அனுபவம் சொல்லித் தரக்கூடிய பாடம், நமக்கு உதவி செய்யாது. ஏனென்றால் காலம் கடந்து தான், நாம் அந்த அனுபவத்தையே பெற்றிருப்போம். அந்த வகையில் இன்று நாம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.

இளமையில் இருக்கும் அதே சந்தோஷம், முதுமையிலும் இருக்க வேண்டும் என்றால், இளமைக்காலத்தில் நாம் தவறாமல் செய்ய வேண்டிய அந்த ஒரு காரியம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கை கால் நன்றாக இருக்கும் போதே நாம் ஆசைப்பட்ட விஷயத்தை செய்து விட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். காலத்தே பயிர் செய் என்றும் சொல்லுவார்கள். அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டிய நல்லது அந்தந்த நேரத்தில் நடந்து விட வேண்டும். நம் கையில் காலம் இல்லை. காலத்தின் கையில் தான் நாம் இருக்கின்றோம். இதையெல்லாம் படிக்கும் போது கொஞ்சம் போரடிப்பது போல தோணும். இருந்தாலும் வாழ்க்கைக்கு இது முக்கியமான விஷயம்.

இளமைக்காலம் கடகடவென்று ஓடிவிடும். ஆனால் முதுமை காலம் அப்படி ஓடாது. நம்மை நிதானமாக நிறுத்தி கஷ்டப்படுத்தும். நமக்கெல்லாம் புரியும் பாஷையில் சொல்லப் போனால், முதுமைக்காலம் நம்மை வெச்சு செய்யும். இதை யாரையும் பயமுறுத்த வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை இதுதான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -

இளமையாக இருக்கும் போதே இப்போது இந்த நொடி நீங்கள் ஆசைப்பட்ட கோவிலுக்கு சென்று வந்து விட வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்தால், முதுமை சீக்கிரம் வந்துவிடும். பிறகு யாரிடம் கேட்டாலும் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும், நம்மை அழைத்துச் செல்வதற்கு ஆள் இருக்காது.

கடைசி காலத்தில் வீடு போபோ என்று சொல்லும், காடு வா வா என்று சொல்லும். அந்த சமயத்தில் சிவசிவா நாமத்தை சொன்னால் நம்முடைய உயிர் பிரிய வேண்டும் அல்லவா. அதற்கு சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை நீங்கள் தரிசனம் செய்திருக்க வேண்டும். இறைவழிபாடு செய்திருக்க வேண்டும். இறைவனை வழிபாடு செய்தால் மட்டும் தான் கடைசி நாட்களில் சந்தோஷம் இருக்கும்.

- Advertisement -

நாராயணா என் உயிரை பிரித்து விடு எனக்கு சொர்க்கத்தில் ஒரு இடம் கொடு. நானும் வைகுண்டம் வர வேண்டும் என்று கேட்ட உடனேயே நம் உயிரை எடுக்க அந்த நாராயணன் வரவேண்டும் அல்லவா. “ஓம் நமோ நாராயணா” என்று சொன்னால் நம் உயிர் பிரிய வேண்டும் என்றால் நீங்கள் ஆசைப்பட்ட கோவிலுக்கு இன்றே சென்று வர வேண்டும். அடிக்கடி இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கடைசி காலகட்டத்தில், சேர்த்து வைத்த கோடான கோடி பணம் நமக்கு உதவாது. நம்முடைய பிள்ளைகளால் நமக்கு உதவ முடியாது. ஆனால் ஈசனும் நாராயணனும் நினைத்தால் மட்டும்தான் நம் வாழ்க்கையை சீர்படுத்த முடியும். படுக்கையில் கிடந்து, பார்ப்பதற்கு ஆள் இல்லாமல் கஷ்டப்படக் கூடிய நிலைமை நமக்கு வரக்கூடாது என்றால், இளமைக்காலம் முடிவதற்குள்ளாகவே உங்களால் எந்தெந்த கோவில்களுக்கு, எந்தெந்த திருத்தலங்களுக்கு செல்ல முடியுமோ அந்த கோவில்களுக்கு எல்லாம் சென்று புண்ணியத்தை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

மனதிருப்தியை அடைந்து கொள்ளுங்கள். ஏனென்றால் கடைசி காலத்தில் வரப்போவது இந்த ஆன்மீகம் மட்டும்தான். நீங்கள் சேர்த்து வைத்த புண்ணியம் மட்டும் தான் உங்களை நல்லபடியாக கொண்டு போய் சொர்க்கத்தில் சேர்க்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை 12-06-2025 ஹனுமன் வழிபாடு

எவ்வளவோ தலைக்கு மேல் வேலை நமக்கு இருக்கிறது. இருந்தாலும் நமக்கான நேரத்தை ஒதுக்கி நம் மனதிற்கு பிடித்த கடவுளை, நம் மனதிற்கு பிடித்த இடத்தில் சென்று தரிசனம் செய்ய தவறவிடவே கூடாது. நீண்ட நாட்களாக நீங்கள் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கோவில் எது, எத்தனை நாட்களாக அது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது, கமெண்டில் பதிவு செய்யுங்கள். அந்த கோவிலுக்கு நீங்கள் சீக்கிரம் செல்லும் பாக்கியம் நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம். இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.

சற்று முன்