- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

மகரம் ராசிக்காரர்களுக்கான பொது பரிகாரங்கள்

ஜோதிடத்தின் அடிப்படையில் வானில் இருக்கும் 12 ராசிகளில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதத்தை தான் தமிழர் திருநாளான பொங்கல் விழாவாக கொண்டாடுகின்றனர். ராசிகளில் பத்தாவது ராசியாக “மகரம் ராசி” வருகிறது. மகரம் ராசியின் சிறப்புக்கள் குறித்தும், அந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் அனைத்திலும் சிறப்பான நிலையினை அடையவும், பொருளாதார வளமையையும் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சனிபகவானுக்குரிய ராசியாகவும், செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியாகவும் இருக்கும் மகர ராசியில் பிறந்தவர்கள் எடுத்துக்கொண்ட செயலில் வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து செயலாற்றுவார்கள். நியாய உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த மகர ராசியினர் தங்களின் வாழ்வில் மிகுந்த வளங்களையும், வசதிகளையும் பெறுவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது அவசியம்.

- Advertisement -

மகர ராசியினர் சனிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறையாவது சனீஸ்வர அம்சம் கொண்ட திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாளை வணங்க வேண்டும். சனிக்கிழமைகளில் நவகிரகங்களில் சனி பகவானுக்கு நெய் அல்லது விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முருக பெருமானின் உச்ச ராசியாக இருப்பதால் செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கி வருவதால் இல்லற வாழ்க்கை, பூர்வீக சொத்து, நிலம் போன்ற விடயங்களில் பல நன்மைகள் ஏற்படும்.

கருப்பு நிற ஆடைகளை மகர ராசியினர் எப்போதும் அணியக்கூடாது. சொந்த வீடு அல்லது வாடகை வீடு கிழக்கு திசை பார்த்தவாறு அமைத்து கொள்வது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை தரும். ஏழைகளுக்கு அன்னதானமும், கோயில்களுக்கு வெல்லம், தேன், அரிசி போன்றவற்றை தானம் தருவதால் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
சந்திர பகவான் விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Makara rasi pariharam in Tamil. It is also called Makara rasi in Tamil or Jothida rasi pariharam in Tamil or Rasi pariharam in Tamil or Makaram rasi in Tamil.

- Advertisement -