- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

மனநிம்மதியும் செல்வ செழிப்பும் உயர செய்ய வேண்டிய பூஜை

ஒருவருக்கு எவ்வளவு செல்வ செழிப்பு இருந்தாலும் மன நிம்மதி என்பது இல்லை என்றால் அந்த செல்வ செழிப்பிற்கு எந்தவித பலனும் இல்லை. அதே போல் மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு செல்வ செழிப்பும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. இப்படி மன நிம்மதியும் செல்வ செழிப்பும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் இருக்கக் கூடியதுதான். இந்த மன நிம்மதியும் செல்வ செழிப்பையும் நாம் பெறுவதற்கு நமக்கு உதவக்கூடிய தெய்வமாக திகழ்பவள்தான் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை பெண்கள் எந்த முறையில் வீட்டில் வழிபட்டால் மன நிம்மதியும் செல்வ செழிப்பும் உயர்வும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகாலட்சுமி தாயாரே செல்வத்திற்கு அதிபதியாக திகழ்கிறார். மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்துவிட்டால் நமக்கு செல்வ செழிப்பு ஏற்படும். செல்வ செழிப்பு ஏற்படும் பட்சத்தில் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இப்படி பிரச்சினைகள் தீர்ந்தாலே பாதிக்கும் மேல் மனநிம்மதி என்பது ஏற்படும். ஒரு சில காரியங்கள் மட்டும்தான் பணத்தால் செய்ய முடியாத காரியமாக திகழும். மீதம் இருக்கும் காரியங்கள் அனைத்துமே பணத்தால் பூர்த்தி செய்யக்கூடிய காரியங்களாகவே இருக்கும் என்பதால் இவை இரண்டையும் பெற மகாலட்சுமி தாயாரை நாம் வழிபட வேண்டும்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கிழமையாக திகழ்வது வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று காலையிலேயே எழுந்து பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு ஒரு தீபத்தை ஏற்று வேண்டும்.

முடிந்த அளவிற்கு குத்துவிளக்கு ஏற்றுங்கள். அவ்வாறு குத்து விளக்கை ஏற்றும் பொழுது ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். இந்த விளக்கானது நல்லெண்ணெய் அல்லது சுத்தமான பசு நெய்யை பயன்படுத்தி தான் ஏற்ற வேண்டும். அடுத்ததாக அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், உதிரி பூக்கள் இவற்றை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் அல்லது பால் பாயாசம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து படைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த குங்குமம் மஞ்சள் மற்றும் உதிரி பூக்களை பயன்படுத்தி நாம் அர்ச்சனை செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாரின் மூல மந்திரத்தை கூறியவாறு அர்ச்சனை செய்ய வேண்டும். 108 முறை கூறி அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு. இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் பௌர்ணமி தினத்திலும் நாம் இந்த பூஜையை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளானது நம் வீட்டில் நிலையாக நிலைத்திருக்கும். இதன் மூலம் நமக்கு மனநிம்மதியும் செல்வ செழிப்பும் உயரும்.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டத்தை தரும் தீபம்

மிகவும் எளிமையான இந்த பூஜையை வீட்டில் இருக்கும் பெண்கள் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் கண்டிப்பான முறையில் அவர்கள் வீட்டில் செல்வ செழிப்பு உயரும். மன நிம்மதி உண்டாகும்.

- Advertisement -