- Advertisement -

ஜாதக கட்டத்தில் மாந்தி தோஷம் இருந்தால், வாழ்க்கையில் நல்லதே நடக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும். கணவன் மனைவி பிரிவு உண்டாகும். நல்ல வேலை கிடைக்காது. கடன் தொல்லை ஏற்படும் இந்த பிரச்சனைகளை எல்லாம் சந்தித்து வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்கு நிறைய சோகமான சம்பவங்கள், நிகழும் என்று சொல்லுவார்கள்.

ஜாதக கட்டத்தை ஜோதிடரிடம் காண்பிக்கும் போது நமக்கு மாந்தி தோஷம் இருக்குதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம், இந்த மாதிரி தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்து வெளி வருவதற்கு என்ன பரிகாரம் செய்யலாம். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மாந்தி தோஷம் நீங்க வழிபாடு

உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். பெருமாளை தொடர்ந்து ஐந்து பூதன்கிழமைகள் வழிபாடு செய்தால் மாந்தி தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. 5 மண் அகல் விளக்குகளில் சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்ட வேண்டும்.

புதன்கிழமை பெருமாள் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி பெருமாளுக்கு துளசி இலைகளை வாங்கி கொடுத்து பிரார்த்தனை வைத்துக் கொண்டால் உங்களுடைய மாந்தி தோஷம் நீங்கும். தொடர்ந்து ஐந்து புதன்கிழமை இதை செய்ய வேண்டும். பெண்களாக இருந்தால் இடையில் ஒரு வாரம் மாதவிலக்கு வந்தால், அதை தவிர்த்து விட்டு அடுத்த வாரத்தை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஐந்தாவது வாரம் இந்த விளக்கை ஏற்றும் போது பெருமாளுக்கு உகந்த வெண்பொங்கல் நெய்வேதியமாக வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். மிளகு, சீரகம் இஞ்சி போட்ட வெண்பொங்கல். பச்சரிசி பாசிப்பருப்பு சேர்த்து வெண்பொங்கல். உங்கள் கையாலேயே செய்து ஒரு ஐந்து பேருக்காவது தானம் கொடுப்பது சிறப்பான பலனை தரும்.

மாந்தி தோஷத்தால் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படுபவர்கள் உடனடியாக அதிலிருந்து வெளிவருவதற்கு இந்த எளிமையான பரிகாரமே போதுமானது. பெருமாளது பாதத்தை பற்றி கொண்டால் எந்த தோஷமும் விலகும். மாந்தி தோஷம் மட்டும் என்ன விதிவிலக்கா.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு உங்களால் முடிந்தால் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் இருக்கும் வடாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். அந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பத்திரகாளி அம்மணி தரிசனம் செய்து பிறகு மாந்தீஸ்வரரை தரிசனம் செய்து உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தால் மாந்தி தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

எந்த ஒரு தோஷமாக இருந்தாலும் சரி நமக்கு இந்த தோஷம் வந்துவிட்டதே என்று வருத்தப்பட்டு நம்முடைய வேலைகளை சரியாக கவனிக்காமல் இருக்கக்கூடாது எவ்வளவு பிரச்சனை வந்தாலும் எதிர்கொண்டு போராடி வெற்றி காண வேண்டும் என்ற மனப்பக்குவம் நம்மிடத்தில் வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர செய்ய கூடாதவை

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். தோஷமே இருக்கிறது கிரக சூழ்நிலையே சரியில்லை என்றாலும் சரி, நீங்கள் முயற்சி செய்ததற்கு உண்டான பலனை அந்த கடவுள் நிச்சயம் கொடுப்பான் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -