- Advertisement -
சமையல் குறிப்புகள்

மிக மிக சுலபமாக மாங்காய் ஊறுகாய் இப்படி போட்டு பாருங்கள். ஊறுகாயே போட தெரியாதவர்கள் இந்த ஊறுகாயை போட்டாலும் வேற லெவல் ருசி இருக்கும்.

- Advertisement -

மாங்காய் சீசன் வந்து விட்டது. நிறைய பேருக்கு மாங்காய் ஊறுகாய் போட்டு சாப்பிட பிடிக்கும். ஆனால் ஊறுகாய் பக்குவமாக போட தெரியாது. மிக மிக சுலபமான முறையில் வெயிலில் காய வைக்காமல் காரசாரமான ஊறுகாய் எப்படி போடுவது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெரும்பாலும் ஊறுகாய் போடுவதற்கென தனியாக குண்டு மாங்காய், புளிப்பு மாங்காய் விற்கும் அல்லவா. அதை வாங்கி ஊறுகாய் போட பயன்படுத்திக் கொள்ளுங்கள்

1/2 கிலோ அளவு புளிப்பு மாங்காயை எடுத்து சுத்தமாக கழுவி மேலே இருக்கும் தண்ணீரை நன்றாக துடைத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஊறுகாய் போட்டு முடிக்கும் வரை இந்த மாங்காயில் தண்ணீர் படக் கூடாது. அப்படி தண்ணீர் பட்டால் ஊறுகாய் சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். ஊறுகாய் போட பயன்படுத்தும் தட்டு கிண்ணம், கரண்டி எல்லாம் காய்ந்து இருக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் துடைத்த மாங்காயை மிகவும் பொடியாக வெட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெட்டிய இந்த மாங்காயை ஒரு பெரிய தாம்பாளத் தட்டில் பரப்பி 2 லிருந்து 3 மணி நேரம் வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து வாருங்கள். காயவைத்த இந்த மாங்காய்களை ஒரு சிறிய கிண்ணத்தில் கொட்டி 4 டேபிள்ஸ்பூன் அளவு உப்பு போட்டு ஒரு கரண்டியால் கலக்கி, ஒரு மூடி போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.

மறுநாள் காலை அல்லது மதியம் இந்த ஊறுகாயை திறந்து பார்த்தால் ஊறுகாயில் இருந்து லேசாக தண்ணீர் விட்டு உப்பு மாங்காயில் நன்றாக ஊறியிருக்கும். இப்போது இந்த ஊறுகாயை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 100 ml அளவு நல்லெண்ணெய் ஊற்றி காய வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 3 கொத்து சேர்த்து, உப்பில் ஊற வைத்த மாங்காயை தண்ணீரோடு கடாயில் இருக்கும் தாளிப்பில் கொட்டி விடுங்கள். நன்றாக கலந்து விடுங்கள். மிதமான தீயில் மாங்காய் 10 நிமிடங்கள் வரை வேகட்டும்.

அதன் பின்பு பெருங்காயத் தூள் – 1/4 ஸ்பூன், வெந்தயத் தூள் – 1/2 அரை ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து வெந்து கொண்டிருக்கும் மாங்காயை நன்றாகக் கலந்து விடவேண்டும். அடுப்பு சிம்மிலேயே இருக்கட்டும். மாங்காய் நன்றாக வெந்து சுருங்கி சூப்பராக தயாராகி இருக்கும். மசாலா பொருட்களை சேர்த்த உடன் மாங்காயை நிறைய நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம். 2 நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த ஊறுகாய் நன்றாக ஆறிய பின்பு ஜாடியில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் 1 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். அதற்கு மேல் ஸ்டோர் செய்ய வேண்டுமென்றால் பிரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மணக்க மணக்க இந்த ஊறுகாய்க்கு சூப்பரான ருசியிருக்கும். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அமிர்தமாக இருக்கும். உங்களுக்கு மாங்காய் பிடிக்குமா. மாங்காய் ஊறுகாய் பிடிக்குமா. அப்ப மிஸ்பண்ணாமல் இப்படி ஊறுகாய் போட்டு பாருங்க.

- Advertisement -