- Advertisement -
சமையல் குறிப்புகள்

மாம்பழத்தில் கேசரி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா? இல்லனா உடனே செய்ஞ்சு சாப்பிடுங்க டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும். மிஸ் பண்ணாம இந்த சீசன் முடியறதுக்குள்ள ட்ரை பண்ணுங்க.

- Advertisement -

இதுவரைக்கும் நாம் எத்தனையோ வகை கேசரிகளை சுவைத்திருப்போம். ஒவ்வொரு கேசரியும் ஒவ்வொரு விதமனா சுவையில் தான் இருக்கும். குறிப்பாக கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் கேசரி மிகவும் பிரமாதமாக இருக்கும். அதே போல் அண்ணாச்சி பழத்தை வைத்து செய்யும் கேசரியின் சுவையும் கூட மிகவும் நன்றாகவே இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் மாம்பழத்தை வைத்து சூப்பரான கேசரி எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

ரவை -1 கப், சர்க்கரை -1 கப், மாம்பழ சாறு -1 கப், நெய் – 50 கிராம், சமையல் எண்ணெய் – 50 கிராம், முந்திரி – 10, திராட்சை -10, உப்பு – 1சிட்டிகை, ஏலக்காய்த் தூள் -1/4 டீஸ்பூன்.

- Advertisement -

செய்முறை

இந்த கேசரி செய்வதற்கு முதலில் அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை சேர்த்து பாதி அளவு சிவந்து வந்தவுடன் திராட்சையும் சேர்த்து அதுவும் வறுப்பட்ட உடன் இரண்டையும் தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதே பேனில் ரவையை சேர்த்து அடுப்பை லோ ஃபிலிமின் வைத்து விட்டு ரவையை நிறம் மாறாமல் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.

ரவை நன்றாக வறுபட்ட உடன் அதையும் தனியாக எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் அடுப்பில் அதே பேனை வைத்து ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி 1 சிட்டிகை உப்பு 1டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து தண்ணீரை கொதிக்க விட வேண்டும். கேசரி செய்ய ஒரு கப் ரவைக்கு மூன்று அல்லது மூன்று கப் தண்ணீர் சேர்க்க வேண்டும் இதில் நாம் மாம்பழச்சாறு சேர்க்கப் போவதால் இரண்டு கப் தண்ணீர் சரியாக இருக்கும்.

- Advertisement -

தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு வறுத்து வைத்த ரவையை இதில் சேர்த்து அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து கை விடாமல் கலந்து விடுங்கள். ரவை நன்றாக வெந்து தண்ணீர் அனைத்தையும் உரிந்த பிறகு ஒரு கப் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளுங்கள்.

எப்பொழுதுமே ரவை வெந்த பிறகு தான் சர்க்கரை சேர்க்க வேண்டும் அதற்கு முன்பாகவே சேர்த்தால் கேசரியின் சுவை நன்றாக இருக்காது. அதே போல் சர்க்கரை சேர்த்து உடன் எடுத்து வைத்திருக்கும் எண்ணெய், நெய் இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக இடை இடையே சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதெல்லாம் கேசரி செய்யும் பொழுது பின்பற்ற வேண்டிய சின்ன சின்ன குறிப்புகள்.

- Advertisement -

ரவை சர்க்கரை எல்லாம் நன்றாக கலந்த பிறகு கடைசியாக ஒரு கப் மாம்பழச்சாறை கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்த பிறகு கேசரியில் ஊற்றி கலந்து விட வேண்டும். இந்த சமயத்தில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கடைசியில் மீதம் இருக்கும் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு வறுத்து வைத்த முந்திரி திராட்சையை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: அட இப்படி கூட காபி போடலாமா? தேங்காய் பாலில் நீங்க காபி போட்டு குடிச்சு இருக்கீங்களா? இதோ இப்படிதான் தேங்காய் பால் காபி போடணும். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.

சுவையான மாம்பழ கேசரி தயாராகி விட்டது. ஒரு முறை இந்த மாம்பழ கேசரியை செய்து சாப்பிட்டு பாருங்கள் இவ்வளவு ருசியான கேசரி இதுவரை சாப்பிடாமல் இருந்து விட்டோமே என்று நினைக்கும் அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -