
நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். இதே போல் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் என்றும் கூறியிருக்கிறார்கள். நாக்கிற்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது. ஒன்றும் இல்லாதவற்றை கூட பெரிதாக பேசும், பெரிதாக இருக்கும் ஒரு விஷயம் ஒன்றும் இல்லாமல் போவதற்கும் நம்முடைய நாக்கு ஒன்றே போதும்.
அதனால் தான் வள்ளுவர் இந்த நம்முடைய வாயிலிருந்து வரக்கூடிய இந்த சொல்லிற்கென்றே சொல்லதிகாரம் என்று தனியாக அதிகாரமே எழுதி இருக்கிறார். அவ்வளவு அற்புதமான ஆற்றல் கொண்டதாக திகழக்கூடியது தான் நம்முடைய வாயில் இருந்து வரக்கூடிய சொற்கள். எந்த சொற்களை நாம் பயன்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் நம்மை சுற்றி இருக்கக்கூடிய ஆற்றல்கள் தான் காரணம் என்பது பலருக்கும் தெரியும். எதிர்மறை ஆற்றல்கள் என்பது நம்மை சுற்றி மட்டும் இருக்கக்கூடிய ஒன்று கிடையாது. நமக்குள்ளும் இருக்கக்கூடிய ஒன்று. நமக்குள் இருக்கக்கூடிய இந்த எதிர்மறை ஆற்றல் நம்முடைய எண்ணத்தின் வாயிலாக நம்முடைய சொற்களால் வெளியே வரும். எந்த அளவுக்கு எதிர்மறையான சொற்களை நாம் பயன்படுத்தி பேசுகிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கும் எதிர்மறையான செயல்களை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
நேர்மறையான வார்த்தைகளை எந்த அளவிற்கு உபயோகப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு நமக்கு நன்மைகள் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. பல சாதுக்களை கவனித்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரியும். சாதுக்கள் பொதுவாக வாயை திறந்து எதையும் பேசவே மாட்டார்கள். ஏனென்றால் அந்த சொல்லிற்குரிய வலிமை என்னவென்று அவர்கள் உணர்ந்து இருப்பார்கள். அதையும் மீறி பேசினாலும் ஒன்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுவார்கள்.
நாம் கூறும் ஒரு வார்த்தையால் யாராவது ஒருவர் மனகஷ்டப்பட்டாலோ, மனவேதனை பட்டாலோ அதற்குரிய பலனை நாம் அனுபவிக்க வேண்டும் என்று கூட நம்முடைய புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சொற்களை நாம் பார்த்து பார்த்து எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக பேச வேண்டும். யாரையும் திட்டுக் கூடாது, சாபம் கொடுக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது.
நம்முடைய வார்த்தைகளை இந்த பிரபஞ்சம் கேட்டு அதற்கேற்ற பலனை நமக்குத் தரும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரபஞ்சம் யார் என்ன கேட்டாலும் உடனே தரக்கூடியது. நாம் எந்த வார்த்தைகளை அதிகமாக உபயோகப்படுத்துகிறோமோ அதற்கேற்றார் போல் பலனை இந்த பிரபஞ்சம் நமக்குத் தரும். அந்த வகையில் தான் பலரும் நற்பவி என்னும் வார்த்தையை அடிக்கடி கூறுகிறார்கள். அப்படி கூறும் பொழுது நமக்கு நற்கதி கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
இதே போல் ஒரு வரி மந்திரத்தை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். அந்த மந்திரம் “சுகம் சௌபாக்கியம் தேஹி தேஹி” இந்த ஒரு வரி மந்திரத்தை குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 21 முறையாவது கூற வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் கூறலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். எந்த இடத்தில் இருந்து கொண்டுவேனாலும் கூறலாம். பெண்களுக்கு தீட்டு ஏற்படும் சமயங்களில் கூட இந்த ஒருவரி மந்திரத்தை கூறலாம்.
எந்த அளவிற்கு இந்த மந்திரத்தை நாம் கூறிக் கொண்டே இருக்கிறோமோ அந்த அளவிற்கு இந்த பிரபஞ்சமானது நமக்கு சுகத்தையும் சௌபாக்கியத்தையும் தந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்மர் மந்திரம்
இந்த மந்திர சொற்களை தினமும் நாம் பயன்படுத்தி நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான சுகங்களையும் சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்