
சாதாரண நாட்களில் தேய்பிறை அஷ்டமி திதியில், நாம் செய்யும் பரிகாரம் நமக்கு கொடுக்கும் பலனை விட, இந்த மார்கழி மாதத்தில் வந்திருக்கும் தேய்பிறை அஷ்டமி திதியில், செய்யும் இந்த பரிகாரம் பல்லாயிரம் மடங்கு பலனை கொடுக்கும். அதுவும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து இந்த அஷ்டமி திதியானது நமக்கு இருக்கிறது.
இன்று 22-12-2024 மதியம் 2:32 மணியளவில் தேய்பிறை அஷ்டமி திதி பிறந்துவிட்டது. நாளை மாலை 5:08 மணி வரை இந்த அஷ்டமி திதியானது நீடிக்கிறது. ஆகவே இந்த இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் பைரவர் நினைத்து செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளை பரிகாரங்களை செய்யலாம்.
இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு, உங்களுடைய உள்ளங்கைகளில் 8 மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு தான். 8 மிளகை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பைரவரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு வெள்ளை பேப்பரிலோ அல்லது வெள்ளை துணிலோ வைத்து கட்டி தலையணைக்காடியில் வைத்து தூங்கவும்.
மறுநாள் காலை, நாளை மார்கழி மாத திங்கட்கிழமை பிரம்ம முகூர்த்த நேரத்தில், இந்த மிளகை எடுத்து தலையை 8 முறை சுற்றி, எட்டு திக்கிலும் இந்த மிளகாய் தூக்கி வீசி விட வேண்டும்.(ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு மிளகு வீச வேண்டும்.) வீட்டிற்கு வெளியே வந்து இந்த பரிகாரத்தை செய்யவும். வீட்டிற்கு வெளியே இட வசதி இல்லை என்றால், மொட்டை மாடியில் சென்றும் இதை செய்யலாம்.
மிளகு உங்கள் வீட்டை தாண்டி வெளிப்புறமாக சென்று விழ வேண்டும். மிளகை தூக்கி வீசும் போது என்னுடைய கடன் சுமை என்னை விட்டு வெகு தூரம் செல்ல வேண்டும், கடனை திருப்பி சீக்கிரம் தந்துவிட வேண்டும் பைரவா, என்று பிரார்த்தனை செய்து கொள்ளவும். குலதெய்வத்தையும் வேண்டிக் கொள்ளுங்கள்.
நாளை தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மிளகாய் தூக்கி போட முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள், சூரிய உதயத்திற்கு பின்பு இந்த மிளகை தூக்கி எறியலாம். இருந்தாலும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாளை இந்த மிளகை தலையை சுற்றி போடும் போது உங்களுக்கு இருக்கும் கடன் சுமை அதி விரைவாக உங்களை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: மார்கழியில் பிரம்ம முகூர்த்த சிறப்பு வேண்டுதல்
நாளை காலை எழுந்து இந்த மிளகை தலையை சுற்றி போட்டுவிட்டு, அதன் பின்பு குளிக்கவும். குளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாக கல் உப்பு, மஞ்சள் தூள் போட்டு குளிங்க ள். உங்களைப் பிடித்த கடன் சுமை விலகுவதோடு, உங்களைப் பிடித்து தரித்திரம் பீடையும் விலகி, வருமை விலகி, செல்வ செழிப்பு கொழிக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.