- Advertisement -
- Advertisement -

இறைவனை வழிபாடு செய்ய ஜாதி, மதம், இனம், மொழி இது எதுவுமே தேவையில்லை. தூய்மையான உள்ளம் இருக்கக்கூடிய மனிதன், இறைவனை எப்படி வழிபாடு செய்தாலும் சரி, அந்த பரமாத்மாவின் ஆசிர்வாதம்  பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய கடவுள் இந்த நரசிம்மர். இவரைப் பற்றிய ஒரு வழிபாட்டு முறையையும், ஒரு சின்ன கதையையும் தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நரசிம்மர் கதை:

ஒரு பெரிய முனிவர், ஞானி வனத்தில் அமர்ந்து, இறைவனை காண வேண்டும் என்பதற்காக, அந்த நரசிம்மனை காண வேண்டும் என்பதற்காக தியானம் செய்து கொண்டிருக்கிறார். அந்த வழியாக வந்த ஒரு வேடவன், அந்த முனிவரை பார்த்து எதற்காக இங்கே அமர்ந்து தியான நிலையில் இருக்கிறீர்கள் என்று கேட்கின்றான்.

- Advertisement -

அந்த முனிவருக்கு, இந்த வேடனை பார்க்கும்போது ஒரு ஏளனம், ஒரு வேடனுக்கு இந்த தவத்தை பற்றி எல்லாம் என்ன தெரியும்? இறைவனை பற்றி எல்லாம் என்ன தெரியும்? இவனிடம் சொல்லி புரிய வைக்க முடியாது, என்பதற்காக ‘ஒரு சிங்கத்தை காண வேண்டும் என்பதற்காக இந்த இடத்தில் நான் பிரார்த்தனை செய்கின்றேன் என்று கூறுகின்றார்’அந்த முனிவர்.

ஆனால் அந்த வேடன் சர்வ சாதாரணமாக , “சிங்கம் தானே! அந்த சிங்கத்தோடு தான் நான் தினமும் விளையாடி வருகின்றேன்” என்று சொல்லிட்டு, ஒரு நிமிடத்தில் அந்த சிங்கத்தை அழித்து வருகின்றேன் என்று சொல்லி, அந்த இடத்திலிருந்து கடகடவென கிளம்புகின்றான். கொஞ்ச தூரம் நடந்து சென்று அவன் அந்த சிங்கத்தை ஒரு கையிறில் கட்டி இழுத்து வந்து முனிவருக்கு முன்பாக நிற்கின்றான்.

- Advertisement -

முனிவர் கண்ணுக்கோ சிங்கம் தெரியவில்லை. ஆனால் அந்த வேடனின் கையில் இருக்கும் கயிறு மட்டும் தெரிகிறது. சிங்கம் எங்கே என்று முனிவர் கேட்க. வேடனோ இதோ என் பக்கத்தில் தான் சிங்கம் இவ்வளவு பெரியதாக நிற்கிறது என்று சொல்கின்றான். ஆனால் முனிவருக்கு ஒரே குழப்பம்.

நரசிம்மர், அந்த சிங்க ரூபத்தில் வேடனுக்கு காட்சி தந்துள்ளார். காரணம் வேடனுடைய மனதில் எந்த ஒரு கள்ளங் கபடமும் இல்லை, கர்வம் இல்லை குழந்தை உள்ளம் கொண்டவன் வேடன். வேடனுக்கு பெரிய பெரிய மந்திரம் சொல்லத் தெரியாது, தவம் இருந்து இறைவனை காணுவதற்கான வரத்தை வாங்க தெரியாது, உண்மையான அன்போடு இறைவனை வழிபாடு செய்தால், நரசிம்மர், சிங்க ரூபத்தில் வேடனுக்கு காட்சியளித்தான்.

- Advertisement -

ஆனால் இந்த முனிவருக்கோ தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம். இறைவனை காண முடியும் என்று அகந்தையும் இருந்தது. இறைவன் இப்படிப்பட்ட ரிஷிகளுக்கு மட்டும் தான் காட்சி தருவார் என்ற எண்ணமும் அந்த முனிவர் மனதில் இருந்தது. இப்பேற்பட்ட சர்வ சக்தி கொண்ட முனிவருக்கு நரசிம்மர் காட்சி கொடுத்தாரா? இல்லையே.

வேடன் கையில் சிங்கம் இருக்கிறது என்பதை, முனிவர் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? சிங்கத்தின் ரூபத்தில் இருக்கும் நரசிம்மர் ஒரு பெரிய கர்ஜனையை எழுப்புகிறார். அந்த கர்ச்ஜனையில் அந்த காடு, ஏன் இந்த உலகமே அப்படியே அதிர்ந்து போகிறது. ஒரு நிமிடம் முனிவருக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் உங்களுக்கு புரிந்ததா?

இது வெறும் கதை தான். இருந்தாலும் இதுதான் நிஜமும் கூட. எளிமையாக இறைவனிடம் முழு நம்பிக்கையோடு நாம் நெருங்கி சென்றால், அந்த இறைவன் நம்மை நெருங்கி வருவான். எனக்கு எல்லாம் தெரியும் நான் இறைவனுக்கு பல வகையான பிரசாதங்களை கொடுத்து, பல வகையான மந்திரங்களை சொல்லி, பூஜை செய்கின்றேன், என்னால் மட்டும்தான் இறைவனை காண முடியும், எனக்கு மட்டும்தான் இறைவன் ஆசிகளை வழங்குவான் என்ற கர்வத்தோடு இறைவனை வழிபாடு செய்பவர்களுக்கு மட்டுமே இறைவன் சொந்தம் கிடையாது. இதற்கு தான் ஜாதி மதம் இனத்திற்கு அப்பாற்பட்ட சக்தி இறை சக்தி என்று சொல்கிறார்கள்.

நீங்களும் தினமும் இந்த நரசிம்மரை மனமுருக நம்பிக்கையோடு வழிபாடு செய்து பாருங்கள். இந்த மார்கழி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ நேரத்தில், வீட்டில் ஒரு லட்சுமி நரசிம்மரை வைத்து பூஜை செய்யுங்கள். லட்சுமி நரசிம்மரின் படம் வீட்டில் இருக்கலாம் தவறு கிடையாது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் நரசிம்மரை வழிபாடு செய்வது சிறப்பு. அவருக்கு ஒரே ஒரு டம்ளர் பானகம் நெய்வேத்தியமாக வைத்து நம்பிக்கையோடு வணங்கி வந்தாலே உங்களிடம் எந்த கெட்டதும் நடக்காது.

இதையும் படிக்கலாமே: மார்கழி ஞாயிற்றுக் கிழமையில் கேட்க வேண்டிய பாடல்

கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் நவகிரக கோளாறு எதுவுமே உங்களை துன்புறுத்த நினைக்காது. நரசிம்மர் நம் வீட்டில் இருக்கிறார், நம்முடைய மனதிற்குள் கெட்ட எண்ணம் வரக்கூடாது, என்று நமக்கே தோணும். அந்த நரசிம்மர் எந்த வீட்டில் குடி வந்தாலும் சரி, அந்த வீடு சொர்க்கமாக மாறிவிடும். நீங்களும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள். மிக மிக எளிமையான முறையில் நம்பிக்கையோடு வழிபாடு செய்பவர்களுக்கு நரசிம்மரின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -