- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமார்கழி ஞாயிற்றுக் கிழமையில் கேட்க வேண்டிய பாடல்

மார்கழி ஞாயிற்றுக் கிழமையில் கேட்க வேண்டிய பாடல்

- Advertisement -

நவகிரகங்களுக்கு எல்லாம் தலைவனாக விளங்குபவர் சூரியபகவான். சூரிய பகவான் உதிக்கவில்லை என்றால் இந்த பூமியில் இருக்கக்கூடிய ஒரு சின்ன புழு பூச்சி கூட உயிர் வாழ முடியாது. பூமிக்கு ஆதாரமாக விளக்கும் சூரிய பகவானுக்கு, உரிய கிழமை ஞாயிற்றுக்கிழமை, அதிலும் மார்கழி மாதம் வந்திருக்கக்கூடிய ஞாயிற்றுக்கிழமை, சூரிய பகவானை வழிபாடு செய்வது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பின் செல்லக்கூடிய முறையில் சூரிய பகவானை வழிபாடு செய்தால், நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் மன பயம் நீங்கும். மனப்பதட்டும் நீங்கும், நோய் நொடி இல்லாத வாழ்க்கையை பெறுவீர்கள், அது மட்டும் இல்லாமல் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் தவிடு பொடி ஆகும். சில பேருக்கு வாழ்க்கையில் என்னதான் உழைத்தாலும் ஒரு முன்னேற்றமும் இருக்காது.

- Advertisement -

முன்னேற்றத்திற்கான வழி தெரியாமல் தவித்து வருவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமையில், சூரிய பகவானின் இந்த பாடலை காதால் கேட்கும் போதே, அவர்களுக்கு உண்டான பலன் அபரிவிதமான கிடைக்கும். மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமை எந்த பாடலை ஒலிக்க விட்டு காதால் கேட்க வேண்டும் தெரியுமா உங்களுக்கு. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மார்கழி ஞாயிறு சூரிய பகவான் வழிபாடு

மார்கழி ஞாயிறு ஆதித்ய ஹிருதயம் பாடலை ஒலிக்க விட்டு காதால் கேட்டீர்கள் என்றால் உங்களுடைய பிரச்சனைகள் நீங்கும் மன பயம் குறையும். காரில் பயணம் செய்யும் போது, வீட்டில் இருக்கும் போது சினிமா பாடல்களை போட்டு கேட்போம். அதிலிருந்து ஒரு 15 நிமிடங்கள் ஒதுக்கி சூரிய பகவானுக்காக இந்த பாடலையும் கொஞ்சம் கேளுங்கள்.

- Advertisement -

யூட்யூபில் போட்டாலே உங்களுக்கு இந்த பாடல் வந்துவிடும். உங்களால் இந்த பாடலை படிக்க முடியும் என்றால், பார்த்து படித்தாலும் தவறு கிடையாது. ஆனால் இந்த பாடல் வரிகள் படிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். நாலு முறை ஆதித்ய ஹிருதய பாடலை காதில் கேட்டுவிட்டு பிறகு அந்த பாடல் வரிகளை நீங்களே படிக்க முயற்சி செய்யுங்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஆதித்ய ஹிருதய பாடலை படிக்கிறீர்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு ஆதித்ய ஹிருதய பாடலை கேட்கிறீர்களோ, அவ்வளவு அவ்வளவு சூரிய பகவானின் அனுகிரகம் கிடைக்கும். இந்த மார்கழி மாதம் வரும் ஞாயிற்றுக் கிழமையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த பாடலை ஒலிக்க விட்டு கேட்டுப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் மாற்றத்தை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

- Advertisement -

இந்த மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமை வீட்டு பக்கத்தில் நவகிரக சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு செல்லவும். அங்கு இருக்கும் சூரிய பகவானுக்கு கோதுமை தீபம் ஏற்றுவது, ரொம்ப ரொம்ப நல்லது. ஒரு சின்ன பேப்பர் ப்லேட்டில், ஒரு கைப்பிடி அளவு கோதுமையை போட்டு, இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட்டு, வந்தால் ஜாதக கட்டத்தில் சூரிய பகவானால் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: கர்ம வினைகள் தீர மார்கழி பரிகாரம்

எந்த மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையிலும் மேலே சொன்ன பரிகாரத்தை செய்தாலும் உங்களுக்கு பலன் நிச்சயம் கிடைக்கும். ஆனால் மார்கழி மாதம் என்பது இறைவழிபாட்டிற்கு உரிய சிறப்பான மாதம் என்பதால், இந்த மார்கழி மாதத்தில் இந்த பரிகாரத்தை செய்வது இரட்டிப்பு மடங்கு பலனை பெற்று தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்