
சருமத்தில் ஏற்படக்கூடிய முகப்பருக்களை கூட எளிதாக நீக்கி விடலாம் ஆனால் இந்த மாசு மற்றும் மருக்களை நீக்குவது தான் சற்று சிரமமான காரியமாக இருக்கும். வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்து எப்படி குருணை குருணையாக இருக்கக்கூடிய சின்ன சின்ன மருக்களை விரட்டி அடித்து, உடலில் நீங்காமல் இருக்கும் விடாப்பிடியாக கருமையை அகற்றி பொலிவாக மாற்றுவது? என்னும் அழகு குறிப்பு சார்ந்த தகவலை தொடர்ந்து இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
இயற்கையான முறையில் சருமத்தை பராமரித்து, அழகாக்குவதில் முதலிடம் பிடித்தது கற்றாழை ஜெல், இந்த கற்றாழை மடலில் இருந்து கிடைக்கக்கூடிய ஜெல்லை சருமத்தில் சரியான முறையில் பயன்படுத்தினால், சருமம் ஈரப்பதம் குறையாமல் மிருதுவாக எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை தனியாக பிரித்து எடுத்து நன்கு ஆறு முதல் ஏழு முறை அலச வேண்டும். அதன் பிறகு அதனை குழைத்து பயன்படுத்தலாம்.
இப்படி கிடைத்த ஆலுவேரா ஜெல் ஒரு மேஜை கரண்டி அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு மேஜை கரண்டி அளவிற்கு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தேன் இயற்கையாகவே சருமத்திற்கு பல நற்குணங்களை வழங்கக்கூடியது. மாசு, மரு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கொடுக்கக்கூடிய அற்புத சக்தி படைத்தது. பின்னர் வெள்ளை சர்க்கரை சேர்க்க வேண்டும். இவற்றை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை நீங்கள் முகத்தில் முதலில் ஸ்கிரப் செய்வது போல எல்லா இடங்களிலும் ஸ்கிரப் செய்ய வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் முதலில் ஸ்கிரப் செய்த பிறகு, கை, கால் பகுதிகளிலும் நீங்கள் ஸ்கிரப் செய்யலாம். முன் கழுத்து, பின் கழுத்து ஆகியவற்றில் இருக்கும் குட்டி குட்டி மருக்கள் இதன் மூலம் சீக்கிரமே வெளியேறுவதற்கு உதவும். மேலும் அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமை, தொடை மற்றும் கணுக்கால், கை மூட்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய விடாப்பிடியான கருமையும் இது விரட்டியடிக்கும்.
தேய்க்கும் பொழுது ரொம்பவும் அழுத்தம் கொடுக்காமல், மென்மையாக தேய்க்க வேண்டும். அதே சமயத்தில் வேகமாகவும் உங்களுடைய கை வேலை செய்ய வேண்டும். அப்பொழுது தான் சருமத்தில் உராய்வு ஏற்பட்டு அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாகும். மேலும் வேருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் மருக்களும் செயலிழந்து போகும். இந்த கலவை தினமும் பயன்படுத்தக்கூடாது, வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் பயன்படுத்துங்கள். அதன் பிறகு மரு உள்ள இடங்களில் மட்டும் வெல்லத்தை தண்ணீரில் பேஸ்ட் போல கரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் போல நீர்க்க கரைக்க கூடாது. கெட்டியான பேஸ்ட் போல இருக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
வெள்ளிக்கிழமை வெற்றிலை பரிகாரம்
அதனுடன் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு சேர்த்து இந்த கலவையை மரு உள்ள இடங்களில் மட்டும் நீங்கள் வைக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இதை செய்து வந்தால், சீக்கிரம் மருக்கள் கருகி உதிர்ந்து விடும். வெல்லத்துடன் எலுமிச்சை சாறு சேர்க்கும் பொழுது வெளியில் வெயிலில் செல்லாதீர்கள். அதுபோல வெற்றிலை சாறுடன், சுண்ணாம்பு சேர்த்து கலந்து அந்த கலவையை மருக்கள் எங்கு இருக்கிறதோ, அந்த இடத்தில் மட்டும் லேசாக வைக்க வேண்டும். காய்ந்த பிறகு எடுத்து விடுங்கள். இது போல செய்தால் சீக்கிரமே மரு உதிர்ந்து விடும்.