- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

கழுத்து, அக்குள் பகுதியில் இருக்கக்கூடிய மருவை இப்படி செய்வதன் மூலம் அதுவே தானாக உதிர்த்து விடும்.

- Advertisement -

பொதுவாக 40 வயதை கடக்கும் நபர்கள் பலருக்கும் மரு என்ற பிரச்சினை இருக்கும். இது கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் அதிகமாக தென்படுகின்றன. இதை நாம் நீக்க வேண்டும் என்று ஏதாவது செய்தோம் என்றால் அதில் இருந்து ரத்தம் வந்து அதிகமாக வலியை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட இந்த மருவை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து எப்படி இயற்கையிலேயே உதிரச் செய்ய முடியும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

மருக்கள் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பொதுவாக கூறப்படும் காரணம் ஹார்மோன் இம்பேலன்ஸ், சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனை, அதிக அளவு ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு மருக்கள் வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மருக்களை நீக்குவதற்கான எளிய வழிமுறைகளை இன்று நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

முதலில் நாம் பார்க்க போகும் முறை வீட்டில் இருக்கும் வெங்காயத்தை வைத்து செய்யும் முறையாகும். பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் என்று எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. பெரிய வெங்காயம் என்றால் பாதி அளவு போதும். சின்ன வெங்காயம் என்றால் மூன்று வெங்காயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தோல் உரித்து நன்றாக சுத்தம் செய்து சிறியதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வெங்காயச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காய சாரில் ஒன்றரை ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். உப்பு கரைந்த பிறகு ஒரு காட்டன் பஞ்சை உபயோகப்படுத்தி அந்த சாரை தொட்டு மருக்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இதை நாம் இரவு உறங்கச் செல்வதற்கு முன் செய்ய வேண்டும். மறுநாள் காலை எழுந்து குளிர்ந்த நீரால் இதை கழுவ வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து நாம் ஏழு நாட்கள் செய்து வர ஆரம்ப நிலையில் இருக்கும் மருக்கள் அனைத்தும் உதிர்ந்து விடும். அதிக நாட்களாக இருக்கும் மருக்களுக்கு தொடர்ந்து இதை நாம் உபயோகப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

மருவை நீக்குவதற்கு மற்றொரு முறை சாலை ஓரங்கள், வயல் வரப்புகள் என்ற இடங்களில் எல்லாம் அம்மன் பச்சரிசி என்ற ஒரு செடி இருக்கும். இந்த செடியில் இருக்கும் இலையை நாம் உடைத்தோம் என்றால் அதில் இருந்து பால் வரும். இந்தப் பாலை மரு இருக்கும் இடத்தில் தடவினோம் என்றால் மருக்கள் விரைவிலேயே கருத்துப் போய் உதிந்துவிடும்.

- Advertisement -

பொதுவாக முகத்திற்கு நாம் ஸ்கிரப்பர் என்று சிலவற்றை உபயோகப்படுத்தி முகத்தில் இருக்கக்கூடிய இறந்து செல்களை நீக்குவோம். அந்த ஸ்கிரப்பரை நாம் மரு இருக்கும் இடத்தில் பயன்படுத்தி தினமும் ஸ்கிரிப் செய்து வருவதன் மூலம் அதில் மருவில் இருக்கக்கூடிய ரத்தநாளங்கள் அனைத்தும் தடைப்பட்டு மருக்கள் கருத்துப் போய் விரைவிலேயே உதிர்ந்திருக்கும்.

இதையும் படிக்கலாம்: 60 வயதானாலும் 30 வயது போல் என்றும் இளமையாக இருக்க நினைப்பவர்கள் இந்த முக சீரத்தை உபயோகித்தாலே போதும். யாராலும் உங்களுடைய உண்மையான வயதை கண்டுபிடிக்கவே முடியாது.

என்னதான் மரு உதிர்வதற்கான வழிமுறைகளை கூறினாலும், மரு ஏற்படுவதற்குரிய காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டு அதன் ஆணிவேரை நாம் சரி செய்தால் தான் மருக்கள் மறுபடியும் வராமல் தவிர்க்கப்படும்.

- Advertisement -