- Advertisement -

மருத்துவ செலவை குறைக்க விளக்கு வழிபாடு

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் சம்பாதிப்பதில் ஒரு பாதி மருத்துவத்துக்கே செலவாகிறது. காலமும் நேரமும் சூழ்நிலையும், நம்முடைய உணவு பழக்கவழக்கமும் ஆரோக்கிய குறைபாட்டை கொடுத்து விடுகிறது. அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் போல, இந்த காலத்தில் வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கை முறை இல்லை.

ஆரோக்கியத்தை வரவைத்துக் கொள்ள உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். அதேபோல வீட்டை சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இது தவிர ஆன்மீகம் சார்ந்த இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றி வைக்கும் போது, மருத்துவ செலவு குறையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களுடைய மன அழுத்தம் குறைந்தாலே, முதலில் நோய் வருவதை குறைக்கலாம். மன அழுத்தத்தை குறைத்து, மன நிம்மதியை கொடுத்து, வீட்டில் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய அந்த விளக்கு பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

ஆரோக்கியத்தை கொடுக்கும் விளக்கு

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் ஒரு துண்டு பச்சை கற்பூரம், 3 வேப்ப இலைகள். ஒரு காட்டன் வெள்ளைத் துணியில் பச்சை கற்பூரத்தையும், வேப்பிலையையும் போட்டு சின்ன முடிச்சாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த எண்ணெயில் இந்த முடிச்சை போட வேண்டும்.

- Advertisement -

லேசாக அந்த விளக்கு எரியும் சூட்டில், இந்த பச்சை கற்பூரம் உருகும். அந்த வேப்பிலையின் வாசமும் நமக்கு அந்த சூட்டின் மூலம் வெளியாகும். இந்த வாசம் வீடு முழுவதும் பரவி இருந்தால், உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அம்பாளை மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் போதும்.

அந்த காலத்தில் வீட்டிற்கு முன்பாக வேப்பமரம் வளர்ப்பார்கள். அந்த வேப்ப மரத்தில் இருந்து வெளிவரக்கூடிய காற்றே நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும். ஆனால் இன்று வேப்ப மரமும் இல்லை. நல்ல காற்றும் இல்லை. ஆகவே இந்த எளிமையான பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு அறிவியல் ரீதியாகவும் நன்மை நடக்கும். ஆன்மீக ரீதியாகவும் நன்மை நடக்கும்.

- Advertisement -

பச்சைக் கற்பூரத்திலிருந்து வெளிவரும் வாசம் நம்முடைய சுவாசத்திற்கு நன்மை செய்யக்கூடியது. மனதிற்கு அமைதியையும் தரும். மன அழுத்தத்தை குறைக்கும். அது மட்டும் இல்லாமல் இது ஆன்மீக ரீதியாக மகாலட்சுமி அம்சத்தை நம் வீட்டிற்கு கொடுத்து விடும். உங்க வீட்ல மருத்துவத்திற்கு அதிகமாக செலவு செய்கிறீர்கள் என்றால் தொடர்ந்து 48 நாள் இந்த விளக்கை வீட்டில் ஏற்றி பாருங்கள்.

காலை அல்லது மாலை உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் இந்த விளக்கை ஏற்றலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் நாட்களிலும் இந்த விளக்கை ஏற்றலாம். காரணம் இந்த விளக்கை பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது. வீட்டு வரவேற்புரையிலும் ஏற்றி வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு வாரத்தில் ஒரு நாள் மாட்டு சாணம் கிடைத்தால் அதை தண்ணீரில் களைத்து நிலை வாசலில் தெளித்து விடுங்கள். வாரத்தில் ஒரு நாளும் இது முடியாது என்றால் மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை பௌர்ணமி இப்படிப்பட்ட நாட்களில் ஆவது இந்த சாணம் தெளிக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய்க்கிழமை சதுர்த்தி வழிபாடு

வீட்டிற்கு உள்ளே மஞ்சள் தண்ணீர் தெளிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் இதை பின்பற்றினால் வீட்டில் ஆரோக்கியம் நிலைக்கும். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் சொன்ன பரிகாரத்தையே தான் இன்றும் இந்த பதிவின் மூலம் நாம் பகிர்ந்து கொள்கிறோம். முன்னோர்கள் சொன்னதை மறக்காமல் இருந்தாலே போதும். நமக்கு வாழ்க்கையில் நிச்சயம் நல்லது நடக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -