- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெவ்வாய்க்கிழமை சதுர்த்தி வழிபாடு

செவ்வாய்க்கிழமை சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

வாங்கிய கடன் கொஞ்சம் கூட குறைந்த பாடாக இல்லை. வட்டிக்கு மேல் வட்டி குட்டி போட்டு, அந்த வட்டியை அடைப்பதற்கு மீண்டும் கடன் வாங்கி, இப்படி கடன் ஏறிக்கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு என்ன வழி. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய கடவுள் விநாயகர். விநாயகருக்கு உகந்த திதி என்றால் சதுர்த்தி திதி. வளர்பிறை சதுர்த்தி திதி வரும்.

தேய்பிறையில் சதுர்த்தி திதி வரும். இந்த இரண்டு திதிகளையும் நீங்கள் தவற விடக்கூடாது. வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அதாவது 9.7.2024 ஆம் தேதி சதுர்த்தி திதி இருக்கிறது. இந்த நாளில் விநாயகரை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டால், விநாயகருக்கு எருக்கன் பூ மாலையை இப்படி கட்டிப்போட்டால், உங்களுடைய கடன் சுமை குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

விநாயகர் வழிபாடு

எருக்கன் பூ விநாயகருக்கு ரொம்ப ரொம்ப உகந்தது. 108 எருக்கன் பூ கட்டாயம் உங்களுக்கு தேவை. சுத்தபத்தமாக குளித்துவிட்டு ஒரு மஞ்சள் நிற நூலில் இந்த 108 பூக்களை கோர்க்க வேண்டும். யாருக்கு கடன் இருக்கோ அவங்க கையாலேயே இந்த பூவை கோர்க்க வேண்டும். என்னுடைய கடன் சுமை குறைய வேண்டும்.

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் விநாயகா என்று சொல்லிக் கொண்டே மனதை ஒருநிலைப்படுத்தி இந்த மாலையை கோர்த்து உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு கொண்டு போய் அணிவிக்க வேண்டும். அர்ச்சகர் இடம் கொடுத்தால் இந்த மாலையை விநாயகருக்கு போட்டு விடுவார்கள்.

- Advertisement -

விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு பிள்ளையார் கொட்டு வைத்து விநாயகரை 9 முறை பிரதட்சணமாக வலம் வர வேண்டும். மனசுக்குள் ஒரே ஒரு வேண்டுதல் தான் இருக்க வேண்டும். என்னுடைய கடன் சுமையை குறைத்து விடு விநாயகா என்று பிரார்த்தனை வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

உங்க வீட்டு பக்கத்தில் அரச மரத்தடி பிள்ளையார் இருந்தால் அந்த பிள்ளையாருக்கு உங்கள் கையாலேயே இந்த மாலையை போட முடியும் அல்லவா. அப்படி போட்டால் இன்னும் பல மடங்கு பலன் கிடைக்கும். ஒரு முறை மட்டும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் போதாது தொடர்ந்து. 9 மாதங்கள், வரக்கூடிய சதுர்த்தி திதியில் மறக்காமல் பிள்ளையாரை போய் பாருங்க.

- Advertisement -

கையோடு இந்த எருக்கன் மாலையையும் கட்டி எடுத்துக்கிட்டு போயிருங்க. இந்த பரிகாரத்திற்கு அப்படி ஒவ்வொரு பவர் இருக்கு இந்த ஒன்பது மாதங்களில் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் வந்துவிடும். கடனையெல்லாம் படிப்படியாக குறைத்து விட்டு, நிம்மதியாக வாழ தொடங்கி விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: அரசாங்கத் துறையில் வெற்றி கிடைக்க பரிகாரம்

வரக்கூடிய செவ்வாய்க்கிழமையிலிருந்து இந்த பரிகாரத்தை தொடங்கி விடுங்கள். செவ்வாய்க்கிழமை கடனை குறைக்க உதவுகிறது. இந்த நாளோடு சேர்த்து சதுர்த்தியும் வருகிறது. ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்த நாள். இந்த நாளில் இந்த பரிகாரத்தை தொடங்கினால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேண்டுதல் பலிக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்