- Advertisement -
சமையல் குறிப்புகள்

கொஞ்சம் வித்தியாசமாக இந்த பொடி சேர்த்து மாங்காய் சாதம் செய்து பாருங்களேன். திரும்பவும் மாங்காய் சாதம் செய்தால் இந்தப் பொடி போடாமல் செய்யவே மாட்டீங்க.

- Advertisement -

மாங்காய் சாதம் எல்லாம் அந்தந்த சீசனில் செய்து சாப்பிட்டால் தான் முடியும். எல்லா காலத்திலும் நமக்கு மாங்காய் கிடைக்காது அல்லவா. தற்போது மாங்காய் சீசன். ஒருமுறை உங்களுடைய வீட்டில் மாங்காய் சாதம் இப்படி செய்து பாருங்கள். அத்தனை ருசியாக இருக்கும். புளிப்பு உப்பு காரம், சில மசாலா பொருட்களின் வாசத்தோடு அட்டகாசமான வித்தியாசமான ஒரு கலவை சாதம் எப்படி செய்வது. நேரத்தைக் கடத்தாமல் ரெசிப்பிக்குள் செல்வோம் வாருங்கள்.

முதலில் 1 கப் அளவு உதிரி உதிரியாக வடித்த சாதம் நமக்குத் தேவை. சாதத்தை வடித்து ஆற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 1 மீடியம் சைஸில் இருக்கக்கூடிய மாங்காயை துருவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ரொம்பவும் பெரிய மாங்காயாக இருந்தால் 1/2 மாங்காய் போதும். (நீங்கள் சாதம் போடுவதற்கு ஏற்ப மாங்காயின் அளவை அட்ஜஸ் செய்துகொள்ளலாம்.)

- Advertisement -

இப்போது இந்த மாங்காய் சாதத்திற்கு தேவையான மசாலா பொடியை அரைக்க வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் வரமிளகாய் 10, வெந்தயம் – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கடுகு – 1 ஸ்பூன், இந்த நான்கு பொருட்களையும் போட்டு கருக விடாமல் நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடி அப்படியே இருக்கட்டும்.

இப்போது சாதத்தை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, கருவேப்பிலை – 1 கொத்து, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு சிவக்க வறுத்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதங்கி வந்த உடன் துருவி வைத்திருக்கும் மாங்காயை இந்த எண்ணெயில் போட்டு 2 நிமிடம் வரை வதக்குங்கள். குழைய குழைய மாங்காய் வதங்க வேண்டாம். அடுத்தபடியாக தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி, வடித்த சாதத்தை கடாயில் இருக்கும் மாங்காயோடு கொட்டி ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.

அதன் பின்பு இறுதியாக அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை இந்த சாதத்தோடு சேர்த்து கலந்து ஒரு நிமிடம் போல சூடுபடுத்தி அடுப்பை அணைத்துவிடுங்கள். ஒரு மூடியைப் போட்டு சாதத்தை அப்படியே ஊற விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து எடுத்துப் பரிமாறுங்கள். அத்தனை சுவையாக இருக்கும். இதை லஞ்சுக்கு கட்டிக்கொடுத்து மதியானம் சாப்பிட்டால் சொல்லவே வேண்டாம். இன்னும் இன்னும் சுவையாகத்தான் இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -