
வருடத்தின் முதல் நாள், சரியாக அமைந்துவிட்டால், அந்த வருடம் முழுவதுமே நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை நம்மிடத்தில் இருக்கிறது. வாரத்தில் முதல் நாள் நல்லது நடந்து விட்டால், அந்த வாரம் முழுவதுமே சந்தோஷம் நம்மை தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல தான் மாதத்தில் முதல் நாள், அதிலும் தமிழ் மாதத்தின் முதல் நாள் நம்முடைய மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடந்து விட்டால், அந்த மாதம் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்று தோன்றும்.
அதே போலத்தான் இன்றைய தினம் மாசி முதல் தேதி. வியாழக்கிழமையோடு சேர்ந்து பிறந்திருக்கிறது. நமக்கு பிடித்த ஒரு சத்தத்தை பூஜை அறையில் எழுப்புவோம். இந்த சத்தம், இந்த மாதம் முழுவதும் நம் செவிகளில் கேட்க வேண்டும். அது என்ன சத்தம். பணம் நம் வீட்டில் வந்து கொட்டப் போகும் செல்வம் மழையின் சத்தம் தான். இதைக் கேட்கவே ஆனந்தமாக இருக்கும் அல்லவா. இன்றைய தினம் பூஜை அறையில் செய்ய வேண்டிய அந்த சிறப்பு வழிபாட்டை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
குபேரருக்கு பிடித்த சத்தம், மகாலட்சுமிக்கு பிடித்த சத்தம், மனிதர்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த சத்தம் சில்லறை சத்தம். இன்று வியாழக்கிழமை அல்லவா. தமிழ் மாதத்தின் முதல் நாள் பூஜை அறையில் இன்று மாலை விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு வெண்கல பாத்திரம் அல்லது பித்தளை பாத்திரம் அல்லது செம்பு பாத்திரம் ஏதாவது ஒன்றைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். நிறைய சில்லறை நாணயங்களை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்று மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் குபேர நேரம். இந்த குபேரன் நேரத்தில் பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு, இந்த சில்லரை நாணயங்களை அந்த பாத்திரத்தில் எடுத்துப் போட வேண்டும். சில்லறையின் சத்தம் எதிரொளிக்கும் “ஓம் குபேராய நமஹ” என்ற மந்திரத்தை ஒவ்வொரு முறையும் சொல்லுங்கள்.
21 நாணயம், 51 நாணயம், 101 நாணயம் அது உங்களுடைய விருப்பம் தான். உங்கள் நேரத்தை பொறுத்தது. 1 ரூபாய் நாணயம், 2 ரூபாய் நாணயம், 10 ரூபாய் நாணயம், 5 ரூபாய் நாணயம் எது வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். இப்படி இந்த சில்லறை நாணயங்களின் சத்தத்தை எழுப்பி, குபேரரது மந்திரத்தை சொல்லி இன்று மாலை 10 நிமிடம் குபேரருக்காக செலவழித்து பூஜை செய்து பாருங்கள். இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு பணம் வந்த வண்ணம் இருக்கும். சொன்னால் நம்ப முடியாது.
ஆனால் நம்பிக்கையோடு இந்த பூஜையை செய்தால் இந்த மாதம் முழுவதும் வரக்கூடிய வருமானத்தை பற்றிய கணக்கு வழக்கை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இதுநாள் வரை நிலுவையில் இருந்த பணம் கையை வந்து சேரும். தேவையற்ற செலவுகள் குறையும். வருமானம் பெருகும். இப்படி பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பல நன்மைகள் நடக்கும்.
எதிர்பாராத வகையில் கூட நிறைய யோகங்கள் அடிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள குபேர மந்திரத்தை சொல்லி விட்டு, சில்லறை நாணயங்களை அந்த பாத்திரத்தில் போட்டு, பூஜை அறையில் இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜைக்கு நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: மாசி வெள்ளி மகாலட்சுமி வழிபாடு
உங்களுடைய வீட்டில் இந்த வெங்கலம் செம்பு பித்தளை பாத்திரம் எதுவுமே இல்லை என்றாலும் சில்வர் பாத்திரத்தை வைத்து இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். குபேரரது சிலை திருவுருவப்படம் இல்லை என்றாலும் இந்த பூஜையை செய்யலாம். பூஜை முடிந்தவுடன் இரண்டு நாள் இந்த நாணயங்கள் பூஜை அறையிலேயே இருக்கட்டும் பிறகு எடுத்து சுப செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நன்மை நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.