தை வெள்ளிக்கிழமை, மாசி வெள்ளிக்கிழமை, ஆடி வெள்ளிக்கிழமை, இப்படி வாரம் தோறும், மாதம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை வழிபாடு செய்கின்றோம். ஆனால் பண பிரச்சனை தீர்ந்த பாடாக இல்லையே, என்று மனம் தளர விடக்கூடாது. மகாலட்சுமியை வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்யணும், வழிபாடு செய்யணும், வழிபாட்டினை செய்து கொண்டே இருக்கணும்.
அந்த வகையில் நாளை என்ன சிறப்பான வெள்ளிக்கிழமை. நாளைய தினம் மகாலட்சுமிக்கு முன்பாக எந்த பொருளை வைத்து வழிபாடு செய்தால், பணம் காசு வரும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை. பூரம் நட்சத்திரத்தோடு சேர்ந்து வந்திருக்கிறது. பூரம் நட்சத்திரம் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம். வெள்ளிக்கிழமையோடு இந்த நாள் வந்திருப்பது எத்தனை சிறப்பு. இந்த நாளில் மகாலட்சுமி வழிபாடு செய்ய தவற விடலாமா? நாளைய தினம் மகாலட்சுமி தாயாரை வீட்டிலிருந்தபடியே எப்படி வழிபாடு செய்வது அல்லது கோவிலுக்கு சென்று பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாரை எப்படி வழிபாடு செய்வது.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு
நாளை மாலை வழக்கம் போல பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமிக்கு மல்லிகை பூ அல்லது தாமரை பூ சூட்டி, உங்களால் முடிந்த நெய்வேத்தியம் வைக்கலாம். அழகாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய லட்டு, கடையில் இருந்து ஒரு கிலோ லட்டு வாங்கி பூஜையறையில் வைத்து நெய்வேத்தியம் செய்து வேண்டிய வரங்களை தயாரிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
ஆமாங்க, நெய் வாசம் நிறைந்த சுவையான லட்டுக்கு மகாலட்சுமி தாயார் மயங்குவார்கள். லட்டு குருவின் அம்சம் கொண்டது. குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். ஆக மொத்தத்தில் இரண்டு மிகப்பெரிய யோகம் உங்களுக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருள் குரு பகவானின் அருள் இரண்டும், இரண்டு யோகங்கள் தானே.
உங்கள் வீட்டு பக்கத்தில் பெருமாள் கோவில் இருக்கிறது அங்கு தாயாரின் சந்நிதிக்கு சென்று, அந்த தாயாருக்கு நெல்லிக்காய் மாலை கோர்த்து உங்கள் கையாலேயே மாலையாக அணிவித்து, லட்டு வாங்கி நெய்வேத்தியம் செய்து, அந்த லட்டுவை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுப்பது மிக சிறப்பான பலனை கொடுக்கும்.
பணம் கைக்கு வருவதில் தடை, கைக்கு பணம் வர மாதிரி இருக்குது, ஆனால் பணம் கைக்கு வந்த பாடில்லை. நிலை வாசல் வரைக்கும் வந்த பணம் வீட்டிற்குள் வர தயங்குகிறது. இப்படி இந்த பணத்தை வெளியில் கொடுத்துவிட்டு தவிப்பவர்கள் எல்லாம் நாளைய தினம், இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் பணம் உங்கள் வீடு தேடி வரும்.
உங்களுடைய தேவைகளுக்கு சரியான நேரத்தில் அந்த படத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பணம் வீண் விரயம் ஆவதும் தவிர்க்க படும். எங்களால் கடைக்கு சென்று லட்டு வாங்க முடியாது என்பவர்கள் வீட்டிலேயே பசும்பாலை வாங்கி பால் பாயாசம் செய்தும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நீங்கள் செய்த பிரசாதத்தை உங்கள் கையால் நாலு பேருக்கு தானம் செய்யும்போதுதான் இதற்கு உண்டான பலனை நீங்கள் முழுமையாக பெற முடியும்.
இதையும் படிக்கலாமே: விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு
கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் வீட்டு பக்கத்திலேயே சின்ன சின்ன குழந்தைகள் இருப்பார்கள் அவர்களுக்கு நீங்கள் செய்த பாயாசத்தையோ அல்லது வாங்கி வந்த லட்டுவையோ தானம் கொடுத்து பாருங்கள். அவர்களுடைய மனதிருப்தியே உங்களுடைய பிரச்சனைகளை சரி செய்து விடும். நாளைய தினம் அவசிய மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள் நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்க தொடங்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.