- Advertisement -
- Advertisement -

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிபாடு என்றும் குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் நமக்கு எந்த ஒரு நன்மையாக இருந்தாலும் அது எந்தவித தடைகளும் இல்லாமல் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் எந்த ஒரு சுப காரியம் செய்வதாக இருந்தாலும் குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு விசேஷமான அபிஷேகங்களையும் வழிபாடுகளையும் மேற்கொண்ட பிறகே செய்ய தொடங்குவார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குலதெய்வம் நம் வீட்டிற்கு வந்தால் தான் நம் வீட்டில் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். அப்படி குலதெய்வம் வீட்டிற்கு வருவதற்கு பௌர்ணமி தினத்தன்று ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மாசி பௌர்ணமி குலதெய்வ வழிபாடு

குலதெய்வத்தை அனுதினமும் வீட்டில் வழிபட வேண்டும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். வீட்டில் குலதெய்வத்தின் படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குலதெய்வத்திற்கென்று தனியாக ஒரு தீபத்தை ஏற்றி அந்த தீபத்தில் குலதெய்வம் வீற்றிருப்பது போல் கருதி வழிபாடு செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும். ஒருவருடைய வீட்டில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை இருக்காது என்றும் அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் குலதெய்வம் காவலாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அருளும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட குலதெய்வம் நம்முடைய வீட்டில் நிரந்தரமாக நிலைத்து இருக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் சிறப்பு மிகுந்த சில வழிபாடுகளை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி, அமாவாசை தினங்களில் குலதெய்வங்களுக்காக சிறப்பான வழிபாடுகள் செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளை பெற முடியும். மேலும் மாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று நிலை வாசலில் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் குலதெய்வம் எங்கு இருந்தாலும் ஓடோடி நம்முடைய வீட்டிற்கு வந்து நமக்கு அருள் ஆசி புரிவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தீபத்தை மாலை 6:00 மணிக்கு நிலை வாசலுக்கு வெளியே ஏற்ற வேண்டும். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் மஞ்சள் பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது துணை விளக்கை பயன்படுத்தி ஏற்றுங்கள். துணை விளக்கு என்பது ஒரு சிறிய அகல் விளக்கமாக இருந்தால் கூட பரவாயில்லை. அதில் சாதாரணமான திரியையும் எண்ணெயையும் ஊற்றி அதில் தீப்பெட்டியை வைத்து பொருத்தி அந்த துணை விளக்கை பயன்படுத்தி வீட்டு நிலை வாசலுக்கு வெளியே இருக்கக்கூடிய தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி ஏற்றும் பொழுது உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை மனதார நினைத்துக் கொண்டும் கூறிக்கொண்டும் ஏற்றி அந்த துணை விளக்கை வீட்டிற்குள் எடுத்து வந்து வீட்டு பூஜையறையில் இருக்கக்கூடிய முதன்மையான விளக்கை முதலில் ஏற்றி பிறகு மற்ற விளக்குகளை அதே துணை விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குலதெய்வத்தை நாம் வீட்டிற்குள் அழைத்து நம் வீட்டு பூஜை அறையில் நிலையாக நிறுத்திவைக்கிறோம் என்று அர்த்தம். பிறகு அமைதியாக அமர்ந்து குலதெய்வத்தின் பெயரை 108 முறை கூறி வழிபாடு செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும். இந்த தீபம் குறைந்தபட்சம் அரை மணி நேரம் எரியட்டும். பிறகு அந்த தீபத்தை அப்படியே எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து பிறகு குளிர வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:முருகன் மற்றும் சிவனின் அருள் கிடைக்க

நம்மை காக்கும் கடவுளாக திகழக்கூடிய நம்முடைய குலதெய்வத்தை நாம் முழுமனதோடு நினைத்து இந்த முறையில் தீபமேற்றி மாசி பௌர்ணமி நாளன்று வழிபாடு செய்ய குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -