
இன்றைய தினம் மே ஒன்றாம் தேதி வியாழக்கிழமை சதுர்த்தி திரியும் சேர்ந்து இருக்கிறது. விநாயகா, இந்த மாதம் ஓடி ஓடி உழைக்க எனக்கு தேவையான சக்தியை கொடு, கடன் சுமையை சமாளிக்கும் சக்தியை கொடு, குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தியை கொடு, வேளையிலும் வியாபாரத்திலும் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர் கொள்ளும் சக்தியை கொடு என்று வேண்டுதல் வைத்து விநாயகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டாலே, உங்களுடைய ஆற்றல் அதிகரிக்கும் சக்தி அதிகரிக்கும்.
எந்த பிரச்சனைக்காகவும் நீங்கள் துவண்டு போக மாட்டீர்கள். இந்த மாதம் முழுவதும் ஓட்டம் எடுக்க, இந்த ஒரு நாள் செய்யும் விநாயகர் வழிபாடு போதுமானது. இன்றைய தினம் விநாயகரை எப்படி கும்பிட வேண்டும். எந்த ஒரு வரி மந்திரத்தை சொல்ல வேண்டும் என்பதைப் பற்றிய தகவலை இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
சதுர்த்தி திதி வழிபாடு என்பது மாலை நேரம் செய்வது தான். சிறப்பு. 2 வெற்றிலை, 2 கலிபாக்கு, 2 வாழைப்பழம், அதன் மேலே இரண்டு அருகம்புல், இதை அப்படியே கொண்டு போய் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலில் கொடுக்க வேண்டும். குருக்களிடம் இதை கொடுத்து, விநாயகர் பாதத்தில் வைக்கும்படி சொல்லிவிடுங்கள்.
உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. நீங்கள் கொடுத்த அந்த தாம்பூலத்தை திரும்பவும் வாங்கக்கூடாது. அது விநாயகரின் பாதத்திலேயே இருக்கட்டும். விநாயகர் கோவிலை மூன்று முறை வலம் வந்து, விநாயகர் நமஸ்காரம் செய்து அந்த கோவிலிலேயே ஒரு இடத்தில் அமர்ந்து நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
ஓம் சக்தி கணபதியே நமோ நமஹ !
மந்திரத்திலேயே சக்தி கணபதி வந்து விடுகிறார். உங்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும். இந்த மே மாதம் முழுவதும் உங்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய சக்தியை விநாயகப் பெருமான் நிச்சயம் வழங்கிவிடுவார். அவ்வளவு அதிசக்தி வாய்ந்த மந்திரம் இது. அதி சக்தி வாய்ந்த வழிபாடு இது. இன்றைய தினம் இந்த வழிபாட்டை செய்ய தவற விடாதீர்கள். கோவிலுக்கு செல்ல முடியாது. தாம்பூலம் வாங்கி விநாயகருக்கு கொடுக்க முடியாது. கவலையே படாதீங்க.
இதையும் படிக்கலாமே: துன்பங்கள் நீங்க வாராகி வழிபாடு
தெருமுனையில் ஒரு பிள்ளையார் இருப்பார். அரச மரத்தடியில் ஒரு பிள்ளையார் இருப்பார். எந்த பிள்ளையார் முன்பாவது ஒரே ஒரு நிமிடம் இன்று மூன்று தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையாரப்பா, என்று கூப்பிட்டு இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு, இந்த நாளை நிறைவு செய்து பாருங்கள். நிச்சயம் இந்த மே மாதம் முழுவதும் உங்களுக்கு நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.