
மீதமான இட்லியை யாருமே சாப்பிட மாட்டாங்க. ஆனா, அந்த மீதமான இட்லியை வைத்து இப்படி ஒரு பொடி இட்லி செய்தால் இந்த இட்லியை யாருக்கும் மிச்சம் வைக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு சுவையான சிம்பிளான ஒரு ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இப்படி மீதமான இட்லியில் இந்த ரெசிபியை செய்து மதியம் லஞ்ச் பாக்ஸுக்கு கூட கட்டிக் கொடுக்கலாம். சூப்பரான சுவையான இந்த பொடி இட்லி ரெசிபியை யாருமே மிஸ் பண்ணாதீங்க. வாங்க நேரத்தை கடத்தாமல் நாமும் இந்த ரெசிபியை தெரிந்து கொள்வோம்.
இந்த குறிப்பில் மீதமான ஐந்து இட்லிக்கு உண்டான அளவுகள் தான் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் எத்தனை இட்லி மீதம் இருக்கோ அதற்கு ஏற்றார் போல், பின் சொல்லக்கூடிய மசாலா பொருட்களை கூட்டி குறைத்து சமைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் மீதமான இட்லியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 3 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1, உப்பு – 2 சிட்டிகை, போட்டு வெங்காயத்தை பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து சின்ன சைஸில் தக்காளி பழம் – 2 பொடியாக நறுக்கியது, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், போட்டு நன்றாக வதக்குங்கள். மல்லித்தழை சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி பழம் நன்றாக வதங்கி, நாம் ஊற்றிய எண்ணெய் பிரிந்து வரும்போது வெட்டி வைத்திருக்கும் இட்லியை இதில் போட்டு கூடவே 4 ஸ்பூன் அளவு இட்லி பொடியை இதன் மேலே தூவி நன்றாக கலந்துவிட்டு சூடு செய்ய வேண்டும்.
வெங்காயம் தக்காளி வதக்கும்போது தண்ணீர் ஊற்றக்கூடாது. வெங்காயம், தக்காளி ட்ரை ஆக நன்றாக வதங்கி வர வேண்டும். அதன் பின்பு இட்லி சேர்த்து, இட்லி பொடியை சேர்த்து அந்த எண்ணெயோடு, மசாலாவோடு நன்றாக பிரட்டி விட்டு, அடுப்பை அணைத்து விட்டால் சூப்பரான ஸ்பாஞ்ச் போல பொடி இட்லி தயாராகி இருக்கும். இது கொஞ்சம் சூடு ஆறிய பின்பு, அப்படியே ஒரு டப்பாவில் போட்டு மதியம் லஞ்சுக்கு சாப்பிட்டாலும் இன்னும் அருமையாக தான் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்கீரை சாறை, இதைவிட ஆரோக்கியமாக சுவையாக சுலபமாக வேறு யாராலும் செய்ய முடியாது.
உங்களுக்கு தேவை என்றால் இட்லி பொடியை இன்னும் கொஞ்சம் கூட சேர்த்துக் கொள்ளலாம். சில பேருக்கு தக்காளி பழத்தை இதில் சேர்த்தால் பிடிக்காது. தக்காளி பழத்துக்கு பதில் புளி சுவையை கொடுக்க 1/2 ஸ்பூன் லெமன் ஜூஸை சேர்த்து கூட இந்த பொடி இட்லியை செய்யலாம். அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் இதில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி கலந்து சாப்பிடுங்கள் வேற லெவல் டேஸ்ட் தான் போங்க.