இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்கீரை சாறை, இதைவிட ஆரோக்கியமாக சுவையாக சுலபமாக வேறு யாராலும் செய்ய முடியாது.

murungai
- Advertisement -

முருங்கை கீரையில் எத்தனையோ வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. அதை பற்றி சொல்ல தொடங்கினால் இந்த ஒரு பதிவு பத்தாது. அதே போல தான் இந்த அரிசி களைந்த தண்ணீரும் இதிலும் பல வகை ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அந்த காலத்து பெரியவர்கள் இந்த தண்ணீரில் ரசம், சாம்பார் போன்றவைகள் வைத்து சாப்பிட்டு வாழ்ந்தார்கள். இத்தனைக்கும் பல ஆண்டு காலம் நோய் இன்றி வாழ்ந்தார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று நாமோ எதற்கெடுத்தாலும் மருத்துவமனையை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் நாம் உண்ணும் உணவு தான். அதற்காக தான் நாம் வீட்டு பெரியவர்கள் கீரை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் அதிக சத்துக்கள் கொண்ட முருங்கை இலையும், அரிசி களைந்த தண்ணீரும் கொண்டு தான் சாறை நாம் செய்ய போகிறோம். வாங்க ரெசிபியை எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை -1 கப், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 5, காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 10 பல், தக்காளி – 1 , தேங்காய்பால் – 1/2 கப், துவரம் பருப்பு -1/4 கப், கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு குக்கர் வைத்து துவரம் பருப்பை கழுவி அதில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நான்கு அல்லது ஐந்து விசில் விட்டு நன்றாக குழைய வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு தாளித்து கொள்ளுங்கள். அடுத்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அலசி வைத்துள்ள கீரையை இதில் சேர்த்து மஞ்சள் தூள் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி, அரிசி கலந்த தண்ணீரை ஊற்றி ஒரு இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள். அதன் பிறகு வேக வைத்துள்ள பருப்பையும் இதில் சேர்த்த பின் உப்பு சேர்த்து அதுவும் ஒரு கொதி வந்தவுடன், அரைத்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலையும் இதனுடன் சேர்த்து லேசாக கொதி வந்தவுடன் இறக்கி விடுங்கள். அருமையான கிராமத்து கைப்பக்குவத்தில் முருங்கைக்கீரை சாறு தயார்.

- Advertisement -

அரிசி களைந்த தண்ணீரில் அதிக அளவில் சத்து இருப்பதை போல இதில் சேர்த்து இருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு, கீரை என அனைத்தும் உடலுக்கு நல்ல சக்தியை தரக்கூடியது தான். இந்த சாறு உடல் சோர்வு இருப்பவர்களுக்கு, உடல் வலி உள்ளவர்களுக்கு, ஒரு நல்ல மருந்து. இவர்களுக்கு மட்டும் இல்லை குழந்தைகளுக்கும் இது மிகவும் நல்லது. இதில் தேங்காய் பால் எடுத்து சேர்த்து இருப்பதால் வயதானவர்கள் கூட தாராளமாக சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: சுவையான பூண்டு தொக்கு ஈசியாக இப்படி செஞ்சு பாருங்க இட்லி, தோசை, சாதத்துக்கு அருமையாக இருக்கும்! ஆரோக்கியமான பூண்டு தொக்கு வீட்டில் எளிதாக செய்வது எப்படி?

இதை அப்படியே சூப் போலவும் குடிக்கலாம் இல்லை நீங்கள் சுட சுட சாதம் வடித்து அதில் இதை ஊற்றி ரசம் போல கரைத்தும் சாப்பிடலாம். வாரம் இரண்டு முறையாவது இதை கட்டாயமாக சாப்பிட்டு வாருங்கள் உடலுக்கு அத்தனை நல்லது.

- Advertisement -