- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் துதிக்க வேண்டிய சித்தர் மந்திரம்

“மேஷம்” என்றால் “கிடாய் ஆடு” என்று பொருள். கிடாய் ஆடு நவகிரகங்களில் “செவ்வாய்” பகவானுக்குரிய விலங்காகும். தமிழ் கடவுளான “முருகப்பெருமான்” செவ்வாய் பகவானின் அம்சம் கொண்டவர். எனவே இந்த ராசியினர் இயற்கையாகவே தைரியம் மற்றும் வீரம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். பல நற்பலன்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள் ஆவர். எனினும் மேஷ ராசியில் பிறந்த அனைவருமே வாழ்வில் சிறப்பான பலன்களை பெற்றிருப்பதாக கருத முடியாது. அந்த வகையில் மேஷ ராசிக்குள்ளாக வருகின்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கூறவேண்டிய சித்தர்கள் மந்திரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

12 ராசிகளில் முதலாவதாக வருகின்ற ராசி மேஷ ராசியாகும். மேஷ ராசி என்பது நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய சொந்த வீடாக இருக்கிறது. சூரியபகவானின் உச்ச வீடாக விளங்குகிறது. இந்த மேஷ ராசிக்குள்ளாக வருகின்ற நட்சத்திரங்கள் அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் முதலாவது பாதமாகும். இந்த மேஷ ராசியினர் மற்றும் இந்த அஸ்வினி, பரணி, கார்த்திகை முதலாம் பாத நட்சத்திரத்தினர் அனைவரும் துதிக்க வேண்டிய சித்தர்களின் மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

மேஷ ராசியில் பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள்

அஸ்வினி நட்சித்திரத்தில் பிறந்தவர்கள் கூற வேண்டிய மந்திரம்

- Advertisement -

ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹரீம் ஹரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வழிபட வேண்டிய சித்தர் ஸ்ரீ போகர் சித்தர் ஆவார். போகர் சித்தர் ஜீவ சமாதி அடைந்திருக்கும் தலம் பழனி மலை ஆகும். வருடத்திற்கு ஒருமுறை பழனி மலைக்குச் சென்று போகர் சமாதியில் வழிபட்டு வருவதால் அஸ்வினி மிகச் சிறப்பான நன்மைகளை பெறமுடியும்.

- Advertisement -

பரணி நட்சித்திரத்தில் பிறந்தவர்கள் கூற வேண்டிய மந்திரம்

ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹாணாங் ஹரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வழிபடவேண்டிய சித்தர் ஸ்ரீ கோரக்கர் சித்தர் ஆவார் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி அடைந்துள்ள இடங்களாக கூறப்படும் தலங்கள் கருவூர் பொய்கைநல்லூர் திருக்கழுக்குன்றம் ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றுக்குச் வருடம் ஒருமுறை சென்று ஸ்ரீ கோரக்கர் சித்தர் வழிபாடு செய்வதால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்

கார்த்திகை(1ம் பாதம் ) பிறந்தவர்கள் கூற வேண்டிய மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகர் மகரிஷியே நம

கார்த்திகை நட்சத்திரத்தில் முதலாம் பாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வழிபட வேண்டிய சித்தர ஸ்ரீ போகர் சித்தர் ஆவார். போகர் சித்தர் ஜீவ சமாதி அடைந்திருக்கும் தலம் பழனி மலை ஆகும். வருடத்திற்கு ஒருமுறை பழனி மலைக்குச் சென்று போகர் சமாதியில் வழிபட்டு வருவதால் வாழ்வில் மிகச் சிறப்பான நன்மைகளை பெறமுடியும்.

சித்தம் தெளிய பெற்றவர்களையே சித்தர்கள் என அழைக்கின்றனர். பூமியில் சாமானிய நிலையில் வாழும் மக்கள் அனைவரும் இறைநிலையை சுலபத்தில் எட்டமுடியாது. அவர்களுக்கு இறைவனின் பிரதிநிதியாக பூமியில் தோன்றிய சித்தர்கள் பல வகையான உதவிகளை உருவமாகவும், அருவமாகவும் செய்த வண்ணமே இருக்கின்றனர். மேஷ ராசியில் வருகின்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் வாழ்வில் சிறப்பான நிலையில் இருக்கின்றனர் என்பதை அறுதியிட்டு கூற இயலாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சினைகள் அன்றாடம் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றன. அப்படிப்பட்டவர்கள் வேறு எந்த தெய்வ வழிபாடு பூஜைகள் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு கூறப்பட்ட சித்தர்களின் மந்திரத்தை ஜபித்து வந்தாலே வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படுவதை அனுபவ ரீதியாக காணலாம்.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் உண்டியல் வருமானம் எவ்வளவு

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mesha rasi siddhar mantras in Tamil. It is also called as Mesha rasi in Tamil or Bogar siddhar in Tamil or Nakshatra mantras in Tamil or Mesha rasi natchathirangal in Tamil.

- Advertisement -