அத்தி வரதர் பெருமாளுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

varadhar

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற காஞ்சி அத்தி வரதர் தரிசனம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்று ஆகஸ்ட் 16 என நேற்றைய தினம் முழுவதும் நிறைவடைந்தது. இன்றைய தினம் அத்தி வரதரை மீண்டும் திருக்குளத்திற்குள் வைக்கும் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அத்தி வரதர் தரிசன வைபவம் குறித்த மேலும் பல விடயங்கள் பற்றி விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் கூட்டம் இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த சில தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

varadharaja perumal

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக தற்காலிகக் கூடங்கள், வரிசையில் நிற்கப் பந்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தடுப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் 15 நாட்களில் திரும்பப் பெறப்படும் என கூறினார். இதற்கான அறிக்கையைத் திட்டக்குழு சமர்ப்பித்துள்ளது. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் இன்னும் இரண்டு தினங்கள் இங்கே தங்கியிருந்து, தங்களின் பணிகளை முழுமையாக நிறைவு செய்வார்கள். அதற்குள் காஞ்சிபுரம் நகரத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் துப்புரவுப் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று விடும்.

மேலும் அடுத்த 15 நாட்களுக்குள் கோயிலுக்கு அருகே இருக்கும் அனைத்து சாலைகளும் மறுசீரமைக்கப்படும். தினந்தோறும் சராசரியாக 25 டன் குப்பைகள் கோயில் வளாகத்தில் சேர்ந்தன. அவையனைத்தும் முறையாகச் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யும் கிடங்கிற்கு அனுப்பப்படுகின்றன எனவும் கூறினார். அதே போல பக்தர்கள் தவறவிட்ட நல்ல நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கான காலணிகளும் முறையாகப் பிரித்து அடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பகுதி அனாதை ஆசிரமங்களுக்கு வழங்கப்பட்டு, மீதமுள்ளவை காஞ்சிபுரம் நகராட்சியால் ஏலம் விடப்படும் என்றும் தெரிவித்தார்.

athi-varadhar

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பணிகளில் ஈடுபட்டு, சளைக்காமல் பணியாற்றிய அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அத்திவரதர் சயனிக்கும் அனந்தசரஸ் திருக்குளத்தைச் சுற்றி மிகவும் உயரமான க்ரில் கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 1 அல்லது 2 மாதங்களுக்கு காவல்துறையின் பாதுகாப்பும் கோயில் குளத்துக்கு வழங்கப்படும் என கூறினார்.

- Advertisement -

Athi-Varadar-Kanchi

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தைச் சிறப்பாக நிறைவு செய்து கொடுத்த அத்தனை அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறை அலுவலர்களுக்கும், கோயில் ஊழியர்களுக்கும் தமிழக அரசு சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார். அத்தி வரதருக்கான உண்டியல் காணிக்கை பற்றி கேட்ட போது இதுவரை எண்ணியதில் 7 கோடி ரூபாய் அளவிற்கு, கோயில் உண்டியல் மற்றும் நன்கொடையாக கிடைத்துள்ளது என்றும் மீதமுள்ள பணத்தை எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முழுமையாக எண்ணிய பிறகு இறுதிக்கட்டத்தில் காணிக்கை விவரங்கள் தெரிவிக்கப்படும் என கூறினார்.

இதையும் படிக்கலாமே:
சபரி மலை கோயில் சதி – பந்தள மன்னரின் எச்சரிக்கை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar Donation in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi vardhar kovil in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.