- Advertisement -
வாஸ்து சாஸ்திரம் | Vasthu sasthram Tamil

வீட்டில் கண்ணாடி மாட்டுவதற்கான வாஸ்து விதிகள்

உலகத்தில் மனிதன் நாகரிகம் அடைவதற்கு முன்பு தனது பிம்பத்தை நீர்நிலைகளில் மட்டுமே கண்டு ரசித்தான். ஆனால் அவன் நாகரிகம் அடைந்த போது தன் உருவத்தை தானே கண்டு களிக்கும் வகையில் முகம் பார்க்கும் கண்ணாடி கண்டுபிடித்தான். இன்றைய கால மனித வாழ்வில் கண்ணாடி அனைவரின் வீட்டிலும் இருக்கும் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. நமது வாஸ்து சாஸ்திரங்களில் வீட்டில் கண்ணாடி எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளன. அது குறித்து விரிவாக இங்கு காணலாம்.

முகம் பார்க்கும் கண்ணாடி எல்லோரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு பொருளாகும். பலரும் நினைப்பது போன்று கண்ணாடி என்பது வெறும் நமது முக தோற்றம், ஆடை அலங்காரங்களை நாம் கண்ணாடியில் கண்டு சரி செய்து கொள்வதற்கானது மட்டுமல்ல. நமது பண்டைய சாஸ்திரங்களில் ஒரு வீட்டில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி செல்வ கடவுளான லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் கண்ணாடிகள் நமது வீட்டில் நேர்மறையான சக்திகளை இருத்தி வைக்கும் தன்மை கொண்டதாகும்.

- Advertisement -

தற்காலங்களில் சொகுசு என்று கருதி முகம் பார்க்கும் கண்ணாடி பொருத்திய மர கட்டில்களை பலரும் பயன்படுத்துகின்றனர். இத்தகைய கண்ணாடி பொருத்திய கட்டில்களில் உறங்குபவர்களுக்கு பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். மனக்குழப்பங்கள் அதிகம் ஏற்படும். இத்தகைய கட்டிலில் உறங்கும் தம்பதிகளுக்குள் கருத்துவேறுபாடுகள், வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகிறது.

நீங்கள் சாப்பிடும் அறைகளில் உங்கள் உருவம் முகம் பார்க்கும் கண்ணாடியில் பிரதிபலிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசை பார்த்தவாறு முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டுவது சிறந்தது. குளியலறையில் கண்ணாடி மாட்டுபவர்கள் கிழக்கு, வடக்கு திசைகளை பார்த்தவாறு கண்ணாடிகளை மாட்டலாம்.

- Advertisement -

இப்போது பலரும் வீட்டின் வாயிலில் எதிர்மறை ஆற்றல்களை வீட்டினுள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்கிற நோக்கில் கண்ணாடியை வீட்டு வாயிற்படி மீது மாட்டி வைக்கின்றனர். இது பலரும் பின்பற்றினாலும், பாரம்பரிய வாஸ்து நிபுணர்கள் இம்முறையை ஆதரிப்பதில்லை. ஏனெனில் லட்சுமி வாசம் செய்யும் பொருளாக இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை வெளிப்புறம் நோக்கி மாட்டுவதால், வீட்டில் பொருள் முடை ஏற்படும். அப்படி வீட்டு வாயிலில் கண்ணாடியை மாட்டுபவர்கள் தினமும் அக்கண்ணாடிகளை சுத்தம் செய்ய வேண்டும், கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டாலோ, உடைந்தாலோ உடனடியாக அக்கண்ணாடியை அப்புறப்படுத்தியவாறே இருக்க வேண்டும். இதை தொடர்ந்து கடைபிடிக்க முடியாதவர்களுக்கு பாதகமான பலன்கள் அதிகம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
வாஸ்துவில் ஈசானிய மூலையின் முக்கியத்துவம்

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mirror vastu in Tamil. It is also called Kannadi vastu in Tamil or Vastu kannadi in Tamil or Kannadi mattum thisai in Tamil or Veetil kannadi vaikum thisai in Tamil.

- Advertisement -