வாஸ்துவில் ஈசானிய மூலையின் முக்கியத்துவம்

eesani-moolai

“கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு” என்பது 4 முக்கிய திசைகள். “வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு” ஆகிய நான்கும் உப திசைகள் ஆக ஒரு வீட்டை வாஸ்து சாஸ்திரம் படி கட்டுவதற்கு இந்த 8 திசைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ள கூடியதாக இருக்கிறது. இதில் வடக்கு திசைக்கும், கிழக்கு திசைக்கும் இடையில் இருக்கும் “வடகிழக்கு திசை” அல்லது “ஈசானிய திசை” பற்றிய சில முக்கிய விடயங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

வாஸ்து சாஸ்திரத்தில் “வடகிழக்கு” திசை “ஈசானிய” திசை என அழைக்கப்படுகிறது. ஒரு மனையில் சிவபெருமனாகிய “ஈசன்” ஆதிக்கம் செலுத்தும் திசையாக ஈசானிய திசை இருக்கிறது. எந்த ஒரு வீட்டிலும் இந்த ஈசானிய திசை அமைந்திருக்கும் நிலை கொண்டே அதற்கேற்ற பலன்கள் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு உண்டாகும். புதிதாக வீடு கட்டுபவர்கள் முடிந்த வரை தங்கள் மனையில் ஈசானியம் எனப்படும் வடகிழக்கு பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

ஈசானிய மூலை காலி இடமாக இருப்பதே நல்லது. அதையும் மீறி சிலர் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையின்மையாலும், அதை பற்றி முழுமையாக அறியாததனாலும் கட்டிடங்களை கட்டுவதால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு வாரிசுகள் உருவாகாமல் போகும் நிலை, பொருளாதார சீரழிவு போன்றவை ஏற்படுகிறது. துஷ்ட சக்திகள் வீட்டில் புகுந்து தொல்லைகளை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு அகால மரணம் போன்றவையும் ஏற்படும்.

water tank

ஈசானிய திசையில் தெருவிலிருந்து வீட்டிற்குள் வரும் குடிநீர் குழாய் தொட்டி, போர்வெல், தண்ணீர் தொட்டி போன்றவை இருக்கலாம். ஒரு சில வீடுகளில் சூழ்நிலையின் காரணமாக ஈசானிய திசையில் தண்ணீர் தொட்டி அமைத்து, அதன் மீது சிமெண்ட் ஸ்லாப் போட்டு அந்த ஈசானிய திசையிலேயே வீட்டின் வெளிப்புற கேட் அமைக்கின்றனர். இது போன்ற செயலால் அந்த வீட்டிற்கு வாஸ்து தோஷம் உண்டாகிறது. இத்தகைய நிலையில் தங்களின் வீடுகளை கொண்டிருப்பவர்கள் தினமும் மாலை வேளைகளில் அந்த ஈசானிய மூலையில் தீபம் ஏற்றி வைப்பதால் வாஸ்து தோஷத்தை நிவர்த்தி செய்யும்.

இதையும் படிக்கலாமே:
மேற்கு பார்த்த வீடு வாஸ்து பலன்

இது போன்று பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Eesani moolai in Tamil.