- Advertisement -

நீங்கள் தெரிந்தே செய்யும் இந்த தவறுகளால் உங்களின் நிதி நிலைமை மற்றும் ஆரோக்கியத்தில் எவ்விதமான பாதிப்புகள் உண்டாகும் என்று உங்களுக்கு தெரியுமா?

நம்முடைய சோம்பேறி தனத்தினாலும், அலட்சியப் போக்கினாலும் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளுக்காக அதிகம் விலை கொடுக்க வேண்டியிருக்கும். குறிப்பாக படுக்கையறை, சமையலறை, கழிவறை இந்த மூன்று இடங்களிலும் நாம் செய்யும் தவறுகளே நமக்கு உண்டாகும் துன்பங்களுக்கு காரணமாக அமைகிறது. அவ்வாறு நாம் செய்யும் தவறுகளால் வரக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன? அவற்றை நாம் எப்படி சரி செய்வது? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

படுக்கை அறையில் சாப்பிடுவது, குளியலறை, கழிவறை போன்ற இடங்களை அழுக்காக வைத்திருப்பது. இவ்வாறான விஷயங்கள் நமது வீட்டில் உள்ள தெய்வ கடாட்சத்தை குறைத்து, வீட்டில் இருக்கும் நல்ல சக்திகள் வெளியேறி தீய சக்திகள் உள் நுழைவதற்கு வாய்ப்பாக அமைகிறது. இவ்வாறு எந்த வித தவறுகளையும் நாம் செய்துவிடக் கூடாது என்பதற்காக தான் நம் முன்னோர்கள் பல சாஸ்திர, சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் இப்போது பலரும் அவற்றையெல்லாம் மறந்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் நடந்து கொள்கின்றனர். இதனால் உண்டாகும் பாதிப்புகள் அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனையாக மாறும் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை.

- Advertisement -

படுக்கை அறை:
படுக்கை என்பது செவ்வாய்க்கு உரியதாகவும், சாப்பாடு என்பது சனிக்கு உரியதாகவும் இருக்கிறது. எனவே படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது செவ்வாய் மற்றும் சனியின் சேர்க்கை ஒன்றாக அமைகிறது. இவ்வாறு சனி மற்றும் செவ்வாய் கிரக சேர்க்கை என்பது கடன் தொல்லை தரக்கூடிய அமைப்பாகிறது. இதனால் வீட்டில் எப்பொழுதும் பணக்கஷ்டம் அதிகமாக வந்து கொண்டிருக்கும். இவற்றை தவிர்க்க இனிமேல் நீங்கள் செய்யும் தவறை மாற்றிக்கொள்ளுங்கள். படுக்கையில் உட்கார்ந்து சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு சாப்பிடுவதற்கென்று இருக்கும் இடத்தில் அமர்ந்து சாப்பிடுங்கள்.

சமையலறை:
சிலர் சமையலறையில் சமைத்த பாத்திரங்களை உடனே கழுவி விடாமல் வெகுநேரம் அப்படியே போட்டு வைப்பார்கள். சமைத்த உணவுடன் அழுக்கான பாத்திரங்களை அப்படியே போட்டு வைப்பது அன்னபூரணியை அவமதிப்பது போன்ற செயலாகும். இதனால் வீட்டில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உண்டாகும். அதுமட்டுமில்லாமல் குடும்ப சூழ்நிலையின் காரணமாக எப்போதும் உங்கள் மனது பதட்டத்துடனே இருக்கும். அறிவியலின்படி சமைத்த பாத்திரங்களை அதிக நேரம் அப்படியே போட்டு வைத்தால் பூஞ்சை தொற்று உருவாகி உடல்நலக் கேடு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இவற்றை தவிர்ப்பதற்காக இரவு எவ்வளவு நேரமானாலும் பாத்திரங்களை சுத்தம் செய்துவிட்டு அதன் பிறகு உறங்கச் செல்வது மிகவும் நன்மையைக் கொடுக்கும்.

- Advertisement -

கழிவறை:
நமது உடலின் மேல் புறத்தையும், உட்புறத்தையும் தூய்மைப்படுத்தும் கழிவறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பல வீடுகளில் அவர்களின் படுக்கையறை, கூடம், பூஜை அறை மற்றும் சமையல் அறை போன்றவற்றை சுத்தமாக வைத்திருந்தாலும் கழிவறையை மட்டும் சுத்தப்படுத்துவதில் சற்று தயக்கம் காட்டுவார்கள். ஆனால் மற்ற அனைத்து இடங்களையும் விட இந்த கழிவறை தான் மிகவும் முக்கியமான ஒரு இடமாகும். இந்த இடம் அசுத்தமாக இருந்தது என்றால் நமக்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய மூதேவி விரைவில் வீட்டிற்கு நுழைந்துவிடுவாள். எனவே கழிவறையை மட்டும் எப்பொழுதும் தூய்மையாக வைத்திருப்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீர் பரிகாரம்:
இரவு தூங்கும் முன்னர் சமையலறையில் ஒரு வாளி முழுவதும் தண்ணீர் பிடித்து வைத்து விட்டு அதன் பிறகு உறங்க செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களுக்கு இருக்கும் அதிகமான கடன் பிரச்சனைகளிலிருந்து விரைவில் விடுபட முடியும்.

அதேபோல் இரவில் குளியலறையிலும் ஒரு வாளி முழுவதும் தண்ணீர் பிடித்து வைத்து அதன் பிறகு உறங்கச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகள் தானாக திறக்கும். உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் நிறைந்து செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -