- Advertisement -
வீட்டு குறிப்புகள்

மிக்ஸியை எளிமையாக சுத்தம் செய்யும் முறை

இன்று மின்சாதன பொருட்களிலே அதிகமாக பயன்படக்கூடியது என்று பார்த்தால் அது மிக்ஸி தான். ஒரு வீட்டின் சமையலறையில் மிக்ஸி இல்லை என்றால் அன்றைக்கு சமையலே இல்லை என்னும் அளவிற்கு மிக்ஸியில் முக்கியமான இடத்தை பிடித்து விட்டது. அப்படி நம்முடைய வாழ்நாளில் அதிமுக்கிய இடத்தை பிடித்த இந்த மிக்ஸிக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அல்லவா?.

இந்த மிக்ஸியை நல்ல முறையில் சுத்தம் செய்து பழுதாகாமல் பார்த்துக் கொள்வது எல்லாம் பெரிய வேலையாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லாமல் கொஞ்சம் நியூஸ் பேப்பர் இருந்தால் போதும் பழைய மிக்சியை கூட புதிதாக மாற்றி விடலாம். அதோடு மிக்சியும் பழுதாகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். வாங்க அது எப்படி என்று வீட்டு குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பழைய நியூஸ் பேப்பர் வைத்து மிக்ஸி சுத்தம் செய்யும் முறை

மிக்ஸியை சுத்தம் செய்ய பல வழிமுறைகள் உண்டு எல்லாவற்றிலும் பிரஸ் ஸ்க்ரப்பர் போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தான் சுத்தம் செய்வோம். இதன் மூலம் மிக்ஸி சுத்தமாகி விடும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதையெல்லாம் பயன்படுத்துவதால் மிக்ஸியின் மேல் கீறல்கள் விழுந்து பார்க்க நன்றாக இருக்காது. அதற்கு தான் இப்பொழுது ஒரு எளிய வழிமுறையை பின்பற்றப் போகிறோம்.

இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் பழைய நியூஸ் பேப்பரை கொஞ்சமாக சின்ன சின்ன துண்டுகளாக கிழித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி ஊற வையுங்கள். இது அதிக நேரம் ஊற வேண்டாம் லிக்விட் ஊற்றிய உடனே பேப்பர் நன்றாக ஊறி விடும். இப்போது இதை எடுத்து மிக்ஸியில் அனைத்து புறங்களிலும் தேய்த்து எடுங்கள். மிக்சி பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

இதற்கு ஏன் பேப்பர் பயன்படுத்த வேண்டும் என்றால் பேப்பரை பயன்படுத்தி துடைக்கும் பொழுது அழுக்குகள் எளிதாக பேப்பருடன் ஒட்டிக் கொண்டு வந்து விடும். அது மட்டும் இன்றி மிக்ஸியில் கீறல் போன்றவை விழாது. மிக்ஸியில் கை வைத்து தேய்க்க முடியாத இடுக்குகளில் கூட கொஞ்சமாக இந்த பேப்பரை போட்டுவிட்டு அதன் பிறகு நீங்கள் பிரஷ் வைத்து ஒரே முறை தேய்த்தாலே பளிச்சென்று மாறி விடும்.

பிரஷ்ஷும் நேரடியாக மிக்ஸியின் மீது படாது என்பதால் மிக்ஸியில் கீறல் விழாது. இத்தோடு சில நேரங்களில் நம்முடைய மிக்ஸி ஜார் சுற்றாமல் அடியில் ஜாம் ஆனது போல நின்று விடும். இதற்கென அடிக்கடி நாம் மிக்ஸி ஜாரை கடையில் கொடுத்து பழுது பார்க்க வேண்டியதாக இருக்கும். அப்படி ஆகாமல் இருக்க நாம் பயன்படுத்தும் மிக்ஸி ஜாரையும் நேரம் கிடைக்கும் போது இது போல சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதற்கு மிக்ஸி ஜாரில் கொஞ்சம் நியூஸ் பேப்பர் போட்டு இதே போல பாத்திரம் தேய்க்கும் லிக்வருடன் சிறிதளவு கல் உப்பு சேர்த்து ஒரு முறை ஜாரை சுற்றி விடுங்கள். இதன் மூலம் ஜாரில் பிளேட் பகுதியில் உள்ள அழுக்குகள் எல்லாம் இந்த பேப்பரில் எளிதாக ஒட்டிக் கொண்டு வந்து விடும். அது மட்டும் இன்றி கல் உப்பு சேர்த்து இருப்பதால் பிளேடும் ஷார்பாக மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: தயிர் புளிக்காமல் இருக்க டிப்ஸ்

இந்த முறையை பயன்படுத்தும் பொழுது மிக்ஸி எப்போதும் புதிதாக இருப்பதுடன் பழுதாகாமலும் இருக்கும். அதிகபட்சம் மிக்ஸியில் வரக்கூடிய பிரச்சனையை இது தான் இந்த முறை அதையும் சரி செய்ய விடும். மிக்ஸியை எளிதாக சுத்தப்படுத்தி பயன்படுத்தும் இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -