தயிர் புளிக்காமல் இருக்க டிப்ஸ்

thayir
- Advertisement -

வெயில் காலம் வந்துவிட்டது. வெயில் பட்டையை கிளப்புகிறது. இந்த நேரத்தில் கடைகளில் இருந்து வாங்கக்கூடிய குளிர்பானங்களை சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும். இதற்கு மாற்றாக வீட்டிலேயே மோர் செய்து குடித்தால் அது உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும். அதே சமயம் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது என்று பலரும் வீட்டில் தயிரை போட்டு மோர் செய்வார்கள்.

ஒரு நாள் தயிர் ஊற்றி வைத்தாலே மறுநாள் இந்த வெயிலுக்கு புளித்து விடும். இந்த புளிப்பு சுவை வராமல் இருக்கவும் அதேசமயம் புளிப்பு சுவையால் வரக்கூடிய வாடை வராமல் இருக்கவும் செய்யக்கூடிய எளிமையான டிப்ஸை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தயிரில் பல நுண்ணுயிரிகள் இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் பல சத்துக்களும் நிறைந்து இருக்கிறது. உடலுக்கு நன்மை தரும் பல பாக்டீரியாக்கள் தயிரில் இருப்பதால் தயிரை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக திகழும் என்று கூறப்படுகிறது. இந்த தயிரை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக சிறிது தண்ணீரை கலந்து மோராக அடித்து குடிப்பதன் மூலம் நம் உடல் இழந்த நீர் சத்தை திரும்ப பெற முடியும்.

நம் கடைகளில் இருந்து மோரோ தயிரோ வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே உரை ஊற்றி வைத்து தயிர் மோர் சாப்பிடும் பொழுது அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அதோடு பாக்கெட் பாலை தவிர்த்துவிட்டு பசும்பாலில் தயிர் மோர் சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியத்தை தரும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. இப்படி நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்காக தயிரையும் மோரையும் சாப்பிடும் பொழுது தயிர் புளித்து விடாமல் இருக்க வேண்டும்.

- Advertisement -

வெயில் காலத்தில் விரைவிலேயே தயிர் புளித்து விடும் அப்படி வீட்டில் போடப்படும் தயிர் விரைவிலேயே புளிக்காமல் இருப்பதற்கு செய்யக்கூடிய சில எளிமையான டிப்ஸ்களை பற்றி பார்ப்போம். முதலில் தயிரை உறை ஊற்றி வைக்கும் பொழுது பால் வெதுவெதுப்பான சூடில் இருக்க வேண்டும். மேலும் அதிக அளவில் தயிரை உறை ஊற்றக்கூடாது. பாலிற்கு ஏற்றவாறு தான் தயிரை உறை ஊற்ற வேண்டும்.

பால் தயிராக மாறிய பிறகு அப்படியே அதே பாத்திரத்தில் ஃப்ரிட்ஜில் எடுத்து வைப்பதற்கு பதிலாக வேறொரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைப்பதன் மூலம் தயிர் விரிவிலேயே புளிக்காது. அப்படி நாம் மாற்றி வைக்கும் பாத்திரமானது மண் பாத்திரம் ஆகவோ அல்லது பீங்கான் பாத்திரமாக இருந்தாலும் விரைவிலேயே தயிர் புளிக்காது. மண் பாத்திரமும் இல்லை பீங்கான் பாத்திரமும் இல்லை சாதாரண சில்வர் பாத்திரம் தான் இருக்கிறது இதை வைத்து எப்படி தயிரை புளிக்க வைக்காமல் பார்த்துக் கொள்வது என்று பார்ப்போமா?

- Advertisement -

இதற்கு காம்பு நீக்காத ஒரு பச்சை மிளகாயை சுத்தமாக கழுவி தயிரில் போட்டு வைக்க தயிர் விரைவிலேயே புளிக்காது. வாடையும் வராது. இதே போல் ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோலை நீக்கிவிட்டு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது இடித்தோ தயிரில் போட்டாலும் தயிர் விரைவில் புளிக்காது. பச்சை மிளகாய் வாடை பிடிக்காது இஞ்சி வாடை பிடிக்காது என்று நினைப்பவர்கள் ப்ரஷ்ஷான தேங்காயை கீறி அதன் தோலை மட்டும் நீக்கிவிட்டு சிறிது சிறிதாக நறுக்கி தயிருடன் சேர்க்க தயிர் விரைவில் புளிக்காது .எந்தவித வாடையும் வராது. புதினா இலைகளை தயிரில் போட்டு வைத்தாலும் தயிர் விரைவில் புளிக்காது.

இதையும் படிக்கலாமே: அழுகிய தேங்காயில் தேங்காய் எண்ணெய் எப்படி எடுப்பது?

இந்த எளிமையான டிப்ஸ்களை நாமும் பயன்படுத்தி நம் வீட்டிலேயே தயிர் உறை ஊற்றி மோராக்கி இந்த வெயில் காலத்திற்கு இதமான மோர் பானத்தை அருந்துவோம்.

- Advertisement -