- Advertisement -
பொது பலன்

Astrology : இந்தாண்டு பணம் விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்?

தற்போதைய உலகத்தில் ஒரு மனிதன் அவன் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறான் அல்லது சேகரித்து வைத்துள்ளான் என்பதை வைத்து அவனை மதிப்பிடும் நிலைக்கு வந்து விட்டது. தற்காலத்தில் பணம் இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய இயலாது. வருமானம் ஈட்டும் போதே ஒரு குறிப்பிட்ட தொகையினை எதிர்காலத்திக்காக சேர்த்து வைப்பது அனைவருக்குமே நல்லது. இந்த ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் எந்தெந்த ராசியினர் பணம் சம்பந்தமான விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

மேஷம் ராசியினருக்கு இந்த 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் நன்மையான பலன்கள் ஏற்படவிருக்கின்றன. உங்கள் ராசிக்கு பணவரவு மிகப்பெரும் அளவில் வரவில்லையென்றாலும் பணப்பற்றாக்குறை ஏற்படாது. நீங்கள் ஈட்டும் செல்வத்தில் உங்களால் முடிந்த அளவிற்கு வருங்காலத்திற்காக சேமிப்பது சிறந்தது. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதால் குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் ஈட்டிய அதிகளவு பணத்தை உடனடியாக வங்கி வைப்பு நிதியில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் உங்கள் கைகளில் பணம் இருந்தால் எதையாவது வாங்க உங்கள் மனம் உங்களை தூண்டிகொண்டே இருக்கும்.

கடகம்:

- Advertisement -

கடக ராசியினருக்கு இந்த ஆண்டு சிறப்பான நன்மைகள் ஏற்படும். குரு பகவான் உங்கள் ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால் இத்தனை ஆண்டு காலம் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், நஷ்டங்களை ஈடு செய்யுமளவிற்கு பொருளாதார ஏற்றங்கள் உண்டாகும். உங்களுக்கு அவ்வப்போது திடீர் பணவரவுகளும் உண்டாகும். குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் தேவையானதை வாங்கி தந்து அவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களுக்கு கிடைக்கின்ற பணத்தில் உங்கள் அத்தியாவசிய செலவீனங்கள் போக, மீதமிருக்கும் பணத்தை வருங்காலத்திற்காக சேமிப்பது நல்லது. பணம் இருக்கிறது என்பதால் உங்களுக்கு அவசியமில்லாதவற்றை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

- Advertisement -

உங்கள் ராசிக்கு குரு பகவான் நான்காம் இடத்தில் இருக்கிறார். எனவே எந்த ஒரு விடயத்திலும் உங்களுக்கு சற்று தடை, தாமதங்காளுக்கு பிறகே அக்காரியங்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் பொருளாதார ரீதியில் மிக சிறப்பான காலம் என்று கூற முடியாது. ஆனாலும் உங்களுக்கு தற்போது கிடைக்க கூடிய வருமானம், லாபங்கள் போன்றவற்றிற்கு பங்கம் ஏற்படாது. வறட்டு கௌரவத்திற்காக கடன் வாங்கி உங்களுக்கு தேவையான காரியங்கள் செய்து கொள்வதை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு அன்றாடம் கிடைக்க கூடிய வருமானத்தில் முடிந்த அளவு தேவையற்ற செலவுகளை தவிர்த்து பணம் சேமிப்பது இந்தாண்டு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மீனம்:

மீனம் ராசியினருக்கு இந்த ஆண்டு சரிசமமான பலன்களே ஏற்படும். ஒரு பக்கம் வருமானம் நன்றாகவே வந்தாலும் மறுபக்கம் நீங்கள் ஊகிக்கவே முடியாத வகையில் செலவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு கடன் வாங்க கூடிய சூழலும் ஏற்படலாம். வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் அதற்கேற்ற உங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் தெரிந்த மனிதர்களால் உங்களுக்கு தன லாபங்கள் ஏற்படும். ஆடம்பர பொருட்களை வாங்கி அனுபவிக்க உங்களின் சக்திக்கு மீறிய செலவுகள் செய்வதையும் முடிந்த அளவிற்கு கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் நிவாரணங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Money issue for rasis in Tamil. It is also called as Jothidam rasi in Tamil or Rasigal in Tamil or 12 rasikal in Tamil or Rasigal palangal 2019 in Tamil.

- Advertisement -