ஜோதிடம் : 12 ராசிகளுக்கும் ஏற்படகூடிய பாதிப்புகளும் அதற்கான நிவாரணம் இதோ

12-rasi
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு பல தலைமுறைகள் சாப்பிடும் அளவிற்கு செல்வம் சேர்த்து வைத்தாலும், மனதிற்கு பிடித்த உணவுகளை சாப்பிட முடியாத நோயாளியாக இருந்தால் அவை அனைத்தும் வீண். எனவே உடல்நலம் தான் மிக சிறந்த செல்வம். அந்த வகையில் 12 ராசியினருக்கும் இந்த ஆண்டு ஏற்படக்கூடிய உடல்நலம் சார்ந்த பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

Mesham Rasi

மேஷம் ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் உடல்நலம் சிறப்பாக இருக்கும். தினமும் ஊட்ட சத்து மிகுந்த உணவுகளையும், சரியான அளவு உடற்பயிற்சியும் செய்து வந்தால் உங்கள் உடலுக்கு எந்த பாதிப்பும் இந்த ஆண்டு ஏற்படாது.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் உடல்நலத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். இந்த ராசியினருக்கு சனி பாதகமான நிலையில் இருப்பதால் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பிறப்புறுப்புகளில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியம்.

மிதுனம்:

- Advertisement -

midhunam

மிதுன ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறைபாடுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையில்லாத சிந்தனைகள், வீண் கவலைகள் போன்றவற்றால் தூக்கமின்மை மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மனதை தேவையற்ற விடயங்களில் செலுத்துவதை தவிர்த்தாலே உடல், மன குறைபாடுகளை நீக்க முடியும்.

கடகம்:

Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு உடலாரோக்கிய விஷயத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் 2019 ஆம் ஆண்டு மிக சிறப்பாகவே இருக்கிறது. குரு உங்கள் ராசிக்கு சாதகமான இடத்தில் இருப்பதால் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் உடல் பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். வயிறு சுலபத்தில் செரிமானம் செய்வதை மட்டுமே சாப்பிட்டு வருவதால் உடல்நலத்தை காத்து கொள்ளலாம்.

சிம்மம்:

simmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உடல்நலத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்படும். இதில் மனதில் வீண் கவலைகள் கொள்வதால் உடல் நலம் வெகு சுலபத்தில் பாதிக்கப்படும் சூழல் உண்டாகிறது. உங்கள் ராசிக்கு ராகு மற்றும் கேது கிரகங்கள் பாதகமான நிலையில் இருப்பதால் மன ஆரோக்கிய குறைவு ஏற்படும் சூழல் அதிகம் உண்டு.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசியினருக்கு இந்த 2019 ஆம் ஆண்டு பெரிய அளவில் உடல்நல பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. எனினும் உங்களின் அன்றாட பணிகள், உணவு உண்ணும் நேரங்களில் ஏற்படும் மாற்றங்கள் உங்களின் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். உங்களின் இதய நலத்தை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியமாகும்

துலாம்:

Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் சுக்கிரன் கிரகத்தின் பாதகமான அமைப்பால் எளிதில் உடல் மற்றும் மன சோர்வு உண்டாவதும், நீண்ட நேரம் உழைப்பதன் காரணமாக சரியான தூக்கம் இல்லாத நிலையும் உண்டாகும். உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள தியானம் செய்வது அவசியம்.

விருச்சிகம்:

virichigam

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அவர்களின் ராசிக்கு பாதகமான நிலையில் ராகு கிரகம் இருப்பதால் முன்கோப உணர்ச்சி அதிகரித்து, சிறு விடயங்களுக்கு கூட அதிகளவு கோபமும், சண்டையிடும் குணம் அதிகரிக்கும். உங்களின் உணவில் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். அதீத உணர்ச்சி வசப்படும் தன்மையை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் உடல் ஆரோக்கிய விடயத்தில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். சனி, கேது மற்றும் குரு கிரகங்கள் உங்கள் ராசிக்கு பாதகமான அமைப்பில் இருப்பதால் உடல் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். சமசீரான, ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

மகரம்:

Magaram rasi

மகரம் ராசிக்காரர்களுக்கு 2019 ஆம் ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் அடிக்கடி உடல் நல பாதிப்புகள் ஏற்படும் ஒரு நிலை இருக்கிறது. இந்த ராசிக்கு சனி பாதகமான அமைப்பில் இருப்பதால் இவர்களுக்கு எதிலும் ஈடுபாடற்ற மனநிலை உண்டாகும். பிறருடன் மனம் விட்டு பேசுவதால் மன அழுத்தங்கள், கவலைகள் போன்றவை நீங்கும்.

கும்பம்:

Kumbam Rasi

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வரவிருக்கும் மாதங்களில் ராகு கிரகத்தின் பாதகமான நிலையால் எதிர்மறையான சிந்தனைகள், செயல்கள் செய்வது என மனநிலை மாற்றம் உண்டாகும். சனி பகவான் உங்களின் கடந்த கால உடல்நல பாதிப்புகளை சரியாக்குவார். உங்களின் வேலை மற்றும் ஓய்வு நேரத்தை சமசீரான அளவில் வைத்து கொள்ள வேண்டும்.

மீனம்:

meenam

மீனம் ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் மாதங்களில் உடல் நலத்தில் சிறிய அளவில் பாதிப்புகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக மூட்டு வலி, எலும்பு தேய்மானம், தசை பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சீரான உடற்பயிற்சிகளை செய்து வந்தால் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படாமல் காத்து கொள்ள முடியும். ஏற்கனவே இருக்கும் உடல்நல பாதிப்புகளை சனி பகவான் சரி செய்வார்.

இதையும் படிக்கலாமே:
சூரிய கிரக தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi health 2019 in Tamil. It is also called as 12 rasi in Tamil or Panirendu rasi in Tamil or Rasigal in Tamil or 12 rasigal in Tamil.

- Advertisement -