
இந்த உணவு வகைகளில் ஒவ்வொரு ஊரின் உணவிற்கும் ஒவ்வொரு வகையான தனி சுவை உண்டு. அந்த வகையில் கேரளாவில் உணவு வகைகள் அனைத்துமே வித்தியாசமான சுவையில் மிகவும் நன்றாகவே இருக்கும். அப்படி ஒரு சுவையான கேரளாவில் பிரபலமான ஒரு சிம்பிள் மோர் கறி ரெசிபியை எப்படி செய்வது என்று இந்த சமையல் பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
தயிர் – 1 கப், தேங்காய் துருவல் -1/2 கப், பச்சை மிளகாய் – நான்கு, சீரகம் – 1 ஸ்பூன், பூண்டு -2 பல், சின்ன வெங்காயம் -10, கருவேப்பிலை -1 கொத்து, இஞ்சி -1 துண்டு, கடுகு -1ஸ்பூன், வெந்தயம் -1/4 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், உப்பு -1/2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் -2, மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்.
இந்த குழம்பை செய்வதற்கு முதலில் ஒரு கப் தயிரை நன்றாக கடைந்து கட்டிகள் இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் மத்து பயன்படுத்தியும் அடித்துக் கொள்ளலாம். அல்லது மிக்ஸியில் ஒரே ஒரு சுற்று மட்டும் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பவுலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பூண்டு, சின்ன வெங்காயம் 3, சீரகம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், உப்பு, கொஞ்சமாக கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முதலில் ஒரு முறை நன்றாக அரைத்த பிறகு மறுபடியும் தண்ணீர் ஊற்றி நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பைப் பற்ற வைத்து அதில் கடாய் வைத்து அரைத்த இந்த விழுதை அதில் ஊற்றி பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு ஏற்கனவே கடைந்து வைத்த தயிரையும் இத்துடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து உடனே அடுப்பை அணைத்து விடுங்கள். தயிர் சேர்த்த பிறகு குழம்பு கொதிக்க கூடாது.
இப்போது ஒரு சின்ன தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான உடன் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்த உடன் கருவேப்பிலை சின்ன வெங்காயம் ஒரு துண்டு இஞ்சி சின்ன சின்ன துண்டுகளாக சீவி சேர்த்து இவையெல்லாம் சிவந்து வரும் வரை வதக்கிய பிறகு காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த தாளிப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றி தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: உருளைக்கிழங்கு காலிஃபிளவர் கிரேவி செய்முறை விளக்கம்:( Califlower Potato Gravy Recipe in Tamil)
பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்தால் நல்ல கம கம வென்ற வாசனையுடன் காய்கறிகள் எதுவும் சேர்க்காத சிம்பிளான கேரளா ஸ்டைல் மோர் கறி தயார். சுட சுட சாதத்துடன் வெறும் அப்பளம் ஊறுகாய் மட்டும் இருந்தால் கூட போதும் ரொம்பவே அருமையாக இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.