- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முடி கொட்டிய இடத்தில் புதிய முடிகள் கிடு கிடுவென்று வேகமாக வளர இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணுங்க. உதிர்ந்த இடத்தில் முடி வளர்வதோடு மீண்டும் உதிராமல் தலை முடி உதிரவே உதிராது.

- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனை என்பது இன்றைய கால கட்டத்தில் சர்வ சாதாரணமாக மாறி விட்டது. ஏனெனில் இன்றைய கால சூழ்நிலை அப்படி உள்ளது. எங்கு பார்த்தாலும் தூசுகளும் அழுக்குகளும் நிறைந்து இருக்கிறது. முடி உதிர்வுக்கு முக்கியமான காரணமே தலைமுடியில் அதிகப்படியான அழுக்கு படிவது தான். அதுமட்டுமின்றி சரியான உணவு முறை பழக்க வழக்கங்கள் இல்லாமல் போவது, உடலில் தோன்றும் ஹார்மோன் மாற்றம் போன்றவைகளும் இதற்கு காரணம்.

எந்த வகை காரணத்தினால் முடி உதிர்வு இருப்பினும் உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடிகள் வளர இயற்கையான முறையில் ஹேர் பேக்களை பயன்படுத்தி வந்தால் அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அந்த வகையில் இன்றைய இந்த அழகு குறிப்பு பதிவில் முடி உதிர்வுக்கு ஒரு அருமையான முடக்கத்தான் கீரை ஹேர் பேக்கை எப்படி போடுவது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

முடி கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடிகள் வளர
இந்த பேக் செய்ய முதலில் இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை நான்கு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கைப்பிடி வெந்தயத்தை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி அலசி எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஊற வைத்த வெந்தியம் 2 டேபிள் ஸ்பூன் தயிர் அனைத்தையும் சேர்த்து வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை யை ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி இதன் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது வடிகட்டி எடுத்த இந்த தண்ணீருடன் இரண்டு ஸ்பூன் கரிசலாங்கண்ணி பவுடர் அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் தலைமுடியை நன்றாக சிக்கு இல்லாமல் சீவிய பிறகு இந்த பேக்கை தலையில் தேய்த்து அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் போல தலைக்கு ஷாம்பு போட்டு குளித்து விடலாம் இந்த பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வரும் பொழுது தலையில் முடிகள் உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடிகள் முளைப்பதோடு முடி வரவும் வளர்ந்த முடி உதிராமல் இருக்கவும் உதவும்.

இதையும் படிக்கலாமே: காசே இல்லாமல், காஸ்ட்லியா ஃபேசியல் செய்த லுக்கை முகத்தில் கொண்டு வர, பட்ஜெட் ஃபேஸ் பேக் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ள இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால் உங்களின் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கும் புதிய முடிகள் வளரவும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த பேக்கை பயன்படுத்தி பலனடையலாம்.

- Advertisement -