காசே இல்லாமல், காஸ்ட்லியா ஃபேசியல் செய்த லுக்கை முகத்தில் கொண்டு வர, பட்ஜெட் ஃபேஸ் பேக் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

face14
- Advertisement -

இப்போது பார்லருக்கு சென்றால் நிறைய காசு கொடுத்து பேசியல் செய்கின்றோம். அப்போது நம்முடைய முகத்தில் கோல்டன் கலரில் பாலிஷ் போட்டது போல ஒரு லுக் கிடைக்கிறது. எப்போதுமே பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் காசு செலவு செய்து இந்த பாலிஷ் லுக்கை நம்மால் பெற முடியுமா. நிச்சயம் முடியாது. உங்களுக்கு கல்யாணம் வைத்திருந்தாலும் சரி நீங்கள் இந்த குறிப்பை தொடர்ந்து ஒரு 15 நாட்கள் பின்பற்றி வந்தால் பேசியல் செய்யாமலேயே உங்களுடைய முகம் கோல்டன் பேசியல் செய்தது போல பள பளப்பாக மாறும். இந்த இன்ட்ரஸ்டிங்கான அழகு குறிப்பு என்ன என்பதை பதிவுக்குள் சென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பப்பாளி ஃபேஸ் பேக் செய்முறை:
இந்த பேஸ் பேக்குக்கு நமக்கு பப்பாளி பழம் தேவை. தோல் சீவி கொஞ்சம் பப்பாளி பழத்தை உங்கள் கையாலேயே நன்றாக மசித்து கொள்ளுங்கள். பழுத்த பப்பாளி பழமாக இதற்கு பயன்படுத்த வேண்டும். பழுத்த பப்பாளிப் பழ பல்ப் 2 ஸ்பூன், சுத்தமான சந்தன பௌடர் 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு  1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்தால் ஒரு ஃபேஸ் பேக் உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்த ஃபேஸ் பேக் கொஞ்சம் திப்பி திப்பியாகத்தான் இருக்கும்.

- Advertisement -

முதலில் இந்த ஃபேஸ் பேக்கை தொட்டு முகம் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் மசாஜ் செய்த பின்பு, மீண்டும் இந்த ஃபேஸ் பேக்கை கொஞ்சம் திக்காக முகத்தில் அப்ளை செய்யுங்கள். முகத்தில் இந்த பேக் போட கொஞ்சம் சிரமமாக இருக்கும். செட் செய்து எப்படியோ போட்டு விடுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து ஜென்டில் ஆக மசாஜ் பண்ணி முகத்தை கழுவி விட்டால் போதும். முகத்தில் உடனடியாக ஒரு பொலிவு கிடைக்கும்.

இதை கழுத்து பகுதியில் போடுங்கள். கைகளுக்கும் இதே பேக்கை போடலாம். 15 நாள் கழித்து நீங்கள் ஏதாவது விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 15 நாளும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக்கை போட்டு வர வேண்டும். முடிந்தால் இரண்டு சின்ன துண்டு பப்பாளி பழத்தை சாப்பிடவும் செய்யுங்கள்.

- Advertisement -

உங்களுடைய சருமம் அப்படியே பளபளப்பாக மாறிவிடும். ஆனால் நீங்கள் இந்த குறிப்புக்கு பயன்படுத்த போகும் சந்தன பொடி, சந்தன பவுடர் ஒரிஜினலாக இருக்க வேண்டும். ஒரிஜினல் சந்தன பவுடர் லேசாக திரி திரியாக இருக்கும். அதே சமயம் தண்ணீரில் போட்டால் அது கரைந்து போகாது. அதனுடைய வாசனை அவ்வளவு சூப்பராக இருக்கும். அதை கொஞ்சம் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: முடி கொட்டுவதை முற்றிலும் நிறுத்த முத்திய முருங்கைக்காய் விதை போதுமா? இது என்ன புது ஐடியாவா இருக்குமோ? முடி உதிர்வை தடுக்க சூப்பர் ஹேர் டானிக் ரெசிபி இதோ உங்களுக்காக.

அடிக்கிற வெயிலில் சன் டேன் கிரீம் போடாமல் வெளியில் சுற்ற வேண்டாம். நிறைய தண்ணீர் பருக வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை சாப்பிட்டு வர வேண்டும். கூடவே தினமும் இரண்டு பாதாம் சாப்பிடுங்கள். கூடவே மேல் சொன்ன இந்த குறிப்பையும் பின்பற்றி வாருங்கள். பிறகு காஸ்ட்லியான அழகை காசே இல்லாமல் குறைந்த செலவில் நாம் பெற்றுவிட்ட மன திருப்தியும் நமக்கு கிடைக்கும். அழகான அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -