- Advertisement -
- Advertisement -

ஒருவருக்கு ஆரோக்கியமான முடி வேண்டும் என்றால் அவர் கண்டிப்பான முறையில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். உடலில் எந்த அளவிற்கு சத்துகள் இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் முடிக்கு மட்டும் விதிவிலக்கு கிடையாது. என்னதான் நாம் ஹேர் பேக், ஹேர் ஆயில் என்று போட்டாலும் எந்த அளவிற்கு சத்தான உணவுகளை உண்கிறோமோ அந்த அளவிற்கு தான் நம்முடைய முடியும் ஆரோக்கியமாக திகழும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் ஆரோக்கியமான முடியை பெறவும் முடி உதிர்தலை தடுக்கவும் என்னென்ன உணவுகளை பின்பற்ற சாப்பிட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

ஒருவருக்கு முடி உதிர்தலோ, வழுக்கையோ விழுகிறது என்றால் அதற்கு முதலில் அவர்களுடைய பரம்பரை காரணமாக இருக்கலாம். அதுக்கடுத்தார் போல் சத்துக் குறைபாட்டினாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். மூன்றாவது தான் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்துவதால் ஏற்படுவது. இதில் முதலில் இருக்கக் கூடிய பரம்பரை ரீதியான விஷயங்களை நம்மால் மாற்ற முடியாது. மீதம் இருக்கக்கூடிய இரண்டு விஷயங்களையும் நம்மால் மாற்ற முடியும். அதுவும் கூட சிறு வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட்டு வரும்பொழுது பரம்பரை ரீதியாக ஏற்படக்கூடிய வழுக்கையை கூட தள்ளிப் போட முடியும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த தலைமுடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிவது வெந்தயம். இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பாக ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவது என்பது மிகவும் சிறப்பு. இதை காலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதில் இரும்பு சத்து அதிக அளவில் இருப்பதால் முடி உதிர்தலை தடுக்கும். அதேபோல் கருவேப்பிலை துவையலை தினமும் சாப்பிட்டு வரும் பொழுதும் நமக்கு முடி உதிர்தல் பிரச்சனை நிற்பதோடு முடி கருமையாக வளர ஆரம்பிக்கும்.

மதிய நேரத்தில் கருப்பு கவுனி அரிசி கஞ்சி குடிப்பதும் பேரிச்சம் பழத்தை அதிக அளவில் சாப்பிடுவதும் நம்முடைய தலைமுடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கக்கூடிய சத்துக் குறைபாட்டை முற்றிலும் நீக்கும். அதே போல் இளநரையையும் நீக்கும். இதோடு மட்டுமல்லாமல் ஒரு ஹேர் பேக் இருக்கிறது இந்த ஹேர் பேக்கை நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

- Advertisement -

வெந்தயத்தை பொடி செய்து வைத்துக்கொண்டு எப்பொழுது எல்லாம் தலைக்கு குளிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் அந்த வெந்தயத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக பேஸ்ட் ஆக கலந்து அதை நம்முடைய தலையில் தேய்த்து ஊறவைத்து பிறகு சிகக்காய் போட்டு குளித்து வர தலைமுடி மிகவும் அற்புதமாக வளர ஆரம்பிக்கும். முடி உதிர்தல் பிரச்சனையே இருக்காது.

இதையும் படிக்கலாமே முகமும் உடலும் பட்டுப்போன்று பளபளப்பாக மாற

மிகவும் எளிமையான இந்த உணவு பட்டியலை தொடர்ந்து 48 நாட்கள் யார் ஒருவர் பின்பற்றி சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கி ஆரோக்கியமான முடியை பெறுவார்கள்.

- Advertisement -