- Advertisement -
- Advertisement -

தலைமுடி உதிர்தலுக்கு உடம்பில் தேவையான சத்துக்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இன்று மாறிவரும் உணவு முறையை பின்பற்றுவதால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. வேகமாக உதிரும் முடியை தடுத்து நிறுத்தி மீண்டும் ஆரோக்கியமாக வளர செய்ய ஹேர்பேக் போட்டுக் கொண்டால் மட்டும் போதாது. இதெல்லாமும் சேர்த்து சாப்பிட வேண்டும். முடி உதிர்வதை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? அருமையான ஹேர்பேக் என்ன? என்னும் தகவல்களை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவில் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

தலைமுடி உதிரும் பிரச்சனையை தடுத்து நிறுத்துவதற்கு உடம்பில் பயோட்டின் சத்து போதுமான அளவிற்கு தேவைப்படுகிறது. பயோடின் சத்தை வைட்டமின் பி7 என்று கூறலாம். பயோட்டின் தலைமுடி, நகம், தோல், மூளை, கண்கள், கல்லீரல், நரம்பு மண்டலம் ஆகியவை ஆரோக்கியமாக இருக்க அவசியம் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சத்தாகும். இந்த பயோட்டின் அதிக அளவு இருக்கக்கூடிய உணவு வகைகளை, நம் அன்றாட உணவோடு சேர்த்து சாப்பிடும் பொழுது, இயற்கையாகவே நம் தலைமுடி உதிர்தல் பிரச்சனை தடுக்கப்படுகிறது.

- Advertisement -

பயோடின் அதிகம் நிறைந்துள்ள உணவு வகைகள் :
பயோடின் அதிகம் நிறைந்துள்ள உணவு வகைகளில் மிகவும் முக்கிய பங்கை வகிப்பது “சர்க்கரை வள்ளி கிழங்கு”. தினமும் ஒரு சர்க்கரை வள்ளி கிழங்கை இட்லி பானையில் 15 நிமிடம் நன்கு அவித்து தோல் உரித்து துண்டுகளாக்கி சாலட் போல சாப்பிடுங்கள். வேக வைத்த முட்டையிலும் பயோட்டின் கணிசமான அளவு இருக்கிறது. தினமும் ஒரு முட்டை சாப்பிட ஆரோக்கியம் மேம்படும்.

200 கிராம் அவகோடாவில் 1.85 மைக்ரோகிராம் அளவிற்கு பயோடின் காணப்படுகிறது. தினமும் இதை ஸ்மூத்தி, ஜூஸ் போன்றவற்றை செய்து பருகி வரலாம். பாதாம், வறுத்த கொட்டைகள், பூசணி விதைகள், அக்ரூட் போன்றவற்றில் பயோட்டின் சத்து ஓரளவிற்கு இருக்கும். இவற்றை அவ்வப்பொழுது வாயில் போட்டு சுவைக்கலாம். சமைக்கக்கூடிய பட்டன் காளான் வகைகளிலும் ஏராளமான பயோடின் நிறைந்துள்ளது. புத்தம் புதிய பிரஷ் ஆன பட்டன் காளான்கள் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால், அதில் 5 மைக்ரோ கிராமுக்கு மேலாக பயோடின் சத்து நமக்கு கிடைக்கும். அடிக்கடி காளான் வகை உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.

- Advertisement -

பால், வாழைப்பழம், யோகர்ட், புரோக்கலி, கீரை வகைகள், பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ், கொழுப்பு மீன்கள், சால்மன் போன்றவற்றில் எல்லாம் பயோடின் சத்து ஓரளவுக்கு காணப்படுகிறது எனவே இந்த பொருட்களை எல்லாம் நீங்கள் தொடர்ந்து உங்களுடைய உணவு வகைகளில் எப்படியாவது சேர்த்துக் கொண்டால், முடி உதிரும் பிரச்சனை இயற்கையான முறையில் கட்டுப்படும், மேலும் முடி செழித்து வளரவும் செய்யும். பயோட்டின் மட்டுமல்லாமல் அயர்ன் சத்தும் தலைமுடி வளர்வதற்கு அவசியமாகும். முருங்கைக் கீரை, மண்ணீரல், பேரிச்சை பழம் போன்ற அயர்ன் சத்து நிறைந்துள்ள பொருட்களையும் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரும்பு சத்துடன் விட்டமின் சி சேர்த்து எடுத்துக் கொள்ளும் பொழுது தலைமுடி உதிர்தல் குறையும்.

இதையும் படிக்கலாமே:
தை அமாவாசை அம்பாள் வழிபாடு

பொடுகு தொல்லை நீங்கி, தலைமுடி வேரிலிருந்து வலுப்பெறுவதற்கு ஒரு கற்றாழை மடலை பிரித்து எடுத்து கிடைக்கும் ஜெல்லை நன்கு அலசி சுத்தம் செய்து அதனுடன் சம அளவிற்கு வேப்பிலைகளையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தலை முழுவதும் ஹேர் பேக் போல போட்டு பத்து நிமிடம் கழித்து தலையை அலசினால் முடி உதிர்தல் கட்டுப்படும். வாரம் ஒரு முறை இதையும் ட்ரை பண்ணுங்க.

- Advertisement -