அம்பாளுக்கு அதீத சக்தி வரக்கூடிய நாள் என்றால், அது தை அமாவாசை, தை மாதம் 16ஆம் தேதி வரவிருக்கிறது. ஆங்கில தேதியின்படி பார்த்தால் 29-1-2025 ஆம் தேதி தை அமாகவாசை திதி. இந்த நாளில் அனைவரும் முன்னோர்களது வழிபாட்டை செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு உண்டான திதி தர்ப்பண காரியங்களை முறையாக செய்து, படையல் போட்டு விரதம் இருந்து, முன்னோர்களுக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும்.
இது முதல் விஷயம். இதோடு சேர்த்து அன்றைய தினம் வீட்டில் இருக்கும் பெண்கள் அம்பாளை வேண்டி விரதம் இருந்து, பின் சொல்லக் கூடிய முறையில் வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கஷ்டங்கள் கூட மிக மிக சுலபமாக உங்களை விட்டு விலகி விடும்.
பணக்கஷ்டம், மன கஷ்டம், சுபகாரியத் தடை, நோய் நொடி பிரச்சனை, செய்யும் வேலையில் பிரச்சனையை வியாபாரத்தில் பிரச்சனை, எதிரிகள் தொல்லை, எதுவாக இருந்தாலும் சரி, இந்த அமாவாசை நாளில் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். அம்பாளுக்கு இரண்டு நெய் விளக்குகள் ஏற்றி வைத்து விடுங்கள். உங்களால் முடிந்த பொருட்களை அம்பாள் கோவிலுக்கு வாங்கி தானம் செய்யலாம்.
குறிப்பாக நல்ல மெருன் கலரில் இருக்கக்கூடிய அழகான வாசனை நிறைந்த குங்குமம், விளக்கு ஏற்றும் சுத்தமான நல்லெண்ணெய் மஞ்சள் அம்பாளுக்கு தேவையான அபிஷேகப் பொருட்கள் என்று உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் செய்வது சிறப்பு. உங்களால் முடியும் என்றால் இந்த அமாவாசை நாளில் அம்பாளுக்கு சாத்த அழகான புடவை வாங்கி தானம் கொடுக்கலாம்.
அம்பாளுக்கு உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் செய்துவிட்டு அந்த கோவிலிலேயே அமர்ந்து அம்பாளை அபிராமி தாயாக நினைத்து, அபிராமி அந்தாதி பாடலை படிப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அபிராமி அந்தாதியின் மொத்தமாக 101 பாடல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பாடல்களும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் ஒவ்வொரு துன்பங்களை நீக்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும்.
கடன் சுமை தீர, வாழ்வில் வெற்றி பெற, படிப்பில் சிறந்து விளங்க, நோய் நொடி விலக, திருமணம் நடக்க இப்படி உங்களுக்கு என்ன பாடல் தேவையோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்த பாராயணம் செய்யலாம். முடிந்தால் அமாவாசை அன்று நூற்றி ஒரு பாடல்களையும் ஒரு முறை படிப்பது மிக மிக சிறப்பு வாய்ந்த பலனைத் தரும்.
இதெல்லாம் எங்களால் முடியாது என்பவர்கள் அபிராமி அந்தாதியில் இறுதியில் வர கூடிய இந்த இரண்டு பாடல்களை மட்டும் ஆவது அன்றைய தினம், ஒரு அம்பாள் கோவிலுக்கு சென்று படியுங்கள். கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் வீட்டிலேயே மாலை நேரத்தில் அந்த அபிராமி தாயை நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த பாடலை படிக்கலாம்.
மிக மிக அதிசக்தி வாய்ந்த நாள் இந்த தை அமாவாசை. இந்த நாளில் சக்தி வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும். அவள் தான் அபிராமிஅன்னை. எந்த பெயரில் சொன்னாலும் அந்த அம்பாள் இந்த உலகத்திற்கு எல்லாம் தாயாக திகழ்வார்கள். அமாவாசை திதியில் நீங்கள் படிக்க வேண்டிய அபிராமி அந்தாதி பாடல் வரிகள் இதோ உங்களுக்காக.
அபிராமி அந்தாதி
ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
இதையும் படிக்கலாமே: அன்றாட சந்தோஷம் அதிகரிக்க பரிகாரம்
மேல் சொன்ன வழிபாட்டை வரும் தை அமாவாசை என்று செய்யுங்கள். வாழ்வில் இருக்கும் துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.