- Advertisement -
- Advertisement -

உடலில் போதுமான இரும்பு சத்து இல்லாவிட்டாலும் தலை முடி அதிகமாக வேரோடு உதிர்ந்து கொட்டும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறி, வேறு தண்ணீரை தலைக்கு குளிக்க பயன்படுத்துகிறீர்கள் என்றாலும், முடி வேரோடு கொட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் மற்ற பல காரணங்களும் முடி கொட்டுவதற்கு இருக்கக்கூடும். விரல்களை தலைமுடிக்குள் நுழைத்து இழுத்து பாருங்கள், நிறைய முடி வேரோடு சேர்ந்து கையோடு வந்திருந்தால், நீங்கள் தீவிரமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள், உங்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்று அர்த்தம்.

முதலில் ஹெல்தியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரும்பு சத்து நிறைந்துள்ள கீரை வகைகள், நட்ஸ், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும். சில நாட்களில் இவை நிகழ்ந்து விடாது. இரண்டு மாதம் தொடர்ந்து இரும்பு சத்துள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு பாருங்கள், நல்ல ரிசல்ட் கிடைக்கும். அடுத்து தலைமுடிக்கு ரத்த ஓட்டத்தை கொடுத்து, ஊட்டச்சத்துடன் எப்படி மீண்டும் அடர்த்தியாக முடி வளர செய்வது? என்பதைத்தான் இந்த அழகு குறிப்பு பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.

- Advertisement -

தலைமுடி உதிர்வுக்கு கற்றாழை, தயிர், சின்ன வெங்காயம், தேங்காய் எண்ணெய், வாழைப்பழம் ஆகிய பொருட்கள் தேவை. தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தக் கலவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் தனித்துவமான சத்துக்களும், பயன்களும் உண்டு.

கற்றாழை: உச்சந்தலையின் pH அளவை சமன் செய்து, மயிர்க்கால்களைத் தூண்டி, முடிக்கு பளபளப்பைக் கொடுக்கும். தயிர்: புரதச்சத்து நிறைந்தது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். பொடுகைக் குறைத்து, முடியை மென்மையாக்கும். சின்ன வெங்காயம்: சல்ஃபர் சத்து முடி வளர்ச்சிக்கு அத்தியாவசியம். முடி உதிர்வதைக் குறைத்து, புதிய முடி வளர உதவும். தேங்காய் எண்ணெய்: முடியின் ஆழம் வரை ஊடுருவி, ஊட்டமளிக்கும். முடி உடைவதைத் தடுத்து, மென்மையாக்கும். வாழைப்பழம்: பொட்டாசியம், வைட்டமின்கள், சிலிக்கா நிறைந்திருப்பதால், முடி உடைவதைத் தடுத்து, அடர்த்தியை அதிகரித்து, ஆழமாக கண்டிஷன் செய்யும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் — நான்கு
கற்றாழை ஜெல் — 2 டீஸ்பூன்
தயிர் — ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் — ஒரு டீஸ்பூன்
வாழைப்பழம் மசித்தது — 2 டீஸ்பூன்

இதையும் படிக்கலாமே:
பணம் வசியமாக திலகம்

பயன்படுத்தும் முறை:
சின்ன வெங்காயம் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றிரண்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கற்றாழை ஜெல், தயிர், தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸியை இயக்கிய நன்கு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவி, 1-1.5 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் ஷாம்பு கொண்டு அலசவும். ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பத்து நிமிடம் வைத்திருந்தால் போதுமானது. அதிக நேரம் வைத்திருந்தால் சளி பிடிக்க வாய்ப்பு உண்டு. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை பயன்படுத்தலாம். இந்தக் கலவை முடி உதிர்வைக் குறைத்து, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். உதிர்ந்த உங்களுடைய தலை முடிக்கு மீண்டும் உயிர் சத்து கொடுக்கும், அற்புதமான ஹேர் பேக் ட்ரை பண்ணி பலனடயுங்கள்.

- Advertisement -