- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முகச்சுருக்கம் இன்றி அழகான இளமையான முகத்தை பெற இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினாலே போதும். என்றும் 16 போல் இளமையுடன் இருப்பீர்கள்.

- Advertisement -

60 வயதிற்கு மேல் வயது முதிர்ச்சி காரணமாக தோலில் சுருக்கங்கள் ஏற்படும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் 30 வயதிலேயே இந்த சுருக்கமானது ஏற்பட்டு விடுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதேபோல் இதை சரி செய்வதற்கு பல வழிகளும் இருக்கின்றது. முறையாக நாம் அந்த வழிகளை பின்பற்றினால் என்றும் பதினாறு போல் இளமையுடன் இருக்கலாம். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகச்சுருக்கம் நீங்கி இளமையாக இருக்க எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்த வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. அது உண்மையும் கூட. நம் மனம் எந்த அளவுக்கு இளமையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய முகமும் இளமையாக இருக்கும். இளமையாக இருப்பது என்பது மகிழ்ச்சியை தரக்கூடியது. அதேபோல்தான் எந்தளவுக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் இளமையாகவும் இருக்க முடியும். மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம் வாழ்ந்தால் நாம் 60 வயதிலும் 20 வயது போல் இளமையுடன் சந்தோஷமாக வாழ முடியும்.

- Advertisement -

முகச்சுருக்கத்தை போக்கும் ஃபேஸ் பேக்:
இந்த பேஸ் பேக்கை நாம் உபயோகப்படுத்துவதற்கு முன்பாக முகத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி நன்றாக மசாஜ் செய்து ஈரமான துணியை வைத்து துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கி விடுவதோடு முகத்தில் இருக்கும் அனைத்து தசைகளை ஆக்டிவாக இருக்கும்.

இந்த பேக்கை பழ ஃபேஸ் பேக் என்று சொல்லலாம். பழங்களை நாம் உணவாக உடலுக்குள் எடுத்துக் கொண்டால், உடல் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்குமோ அதே போல் தான் நம் முகத்திற்கு பூசினாலும் முகம் என்றும் இளமையுடனும் ஆரோக்கியத்துடனும் திகழும். இந்த பழ ஃபேஸ் பேக் தயார் செய்வதற்கு நமக்கு வாழைப்பழம், பப்பாளி பழம், ஆப்பிள் தேவைப்படும்.

- Advertisement -

இந்த மூன்று பழங்களையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து அதை முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் அப்படியே எந்தவித நினைவுகளும் இன்றி எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக ஒரு இடத்தில் அமரவோ அல்லது படுக்கவோ செய்யலாம். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைத்து முகம் பிரகாசமாகவும், இளமையாகவும் தென்படும்.

இந்தப் பழங்களை தனித்தனியாகவும் நாம் முகத்திற்கு பூசலாம். ஆனால் மூன்றையும் சேர்த்து பூசும் பொழுது அதன் பலன் மிகவும் அதிகமாக தெரியும். நாம் இந்த ஃபேஸ் பேக்கை போட்டு விட்டு வேறு வேலைகளை செய்வது, பிறரிடம் பேசுவது இப்படி செய்யாமல் அமைதியாக மனதிற்கு பிடித்த ஏதாவது ஒரு இசையை கேட்டுக் கொண்டு இருந்தாலே மனமும் அமைதி அடைந்து முகமும் தெளிவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கட்டுக்கடங்காத கருகருவென்ற அடர்ந்த நீளமான கருங்கூந்தலை பெற ஆளி விதையை இப்படி பயன்படுத்தினாலே போதும். இந்த எளிமையான குறிப்பு மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

மனதை என்றும் இளமையாக வைத்துக் கொண்டு இளமையான சிந்தனைகளை சிந்தித்துக் கொண்டு இருந்தாலே முகம் என்றும் இளமையாக இருக்கும். தீய எண்ணங்களை விட்டுவிட்டு நல்ல எண்ணங்களை நினைத்துக் கொண்டு அதே சமயம் இந்த மாதிரி பேஸ்பேக்குகளையும் பயன்படுத்தி என்றும் இளமையுடன் இருக்கலாம்.

- Advertisement -