- Advertisement -
அழகு குறிப்புகள் | Beauty tips in Tamil

முகத்தை வெள்ளையாக மாற்ற இதைவிட ஈஸியான ஐடியா எங்க தேடினாலும் கிடைக்காது. வெறும் 7 நாட்களில் எப்படி இவ்வளவு வெள்ளையா மாறின, அப்படின்னு ஊரே கேக்கும் பாருங்க.

- Advertisement -

முகத்தை வெள்ளையாக்குவதற்கு செயற்கையாக நாம் எத்தனையோ கிரீம்களை வாங்கி பயன்படுத்தி இருப்போம். ஆனால் முகம் வெளுத்துப் போகுமே தவிர, அது ஒரு இயற்கையான அழகை கொடுக்காது. ஆனால் இயற்கையான முறையில் சிகப்பழகைப் பெற இந்த குறிப்பு எல்லோருக்கும் பயன்படும். ரொம்பவும் கலர் கம்மியாக இருப்பவர்கள் கூட, ஏழு நாட்களில் தொடர்ந்து இந்த பேக்கை பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக நல்ல வித்தியாசத்தை உணர முடியும். இயற்கையான பொருட்களை வைத்து தான் இந்த பேக்கை தயார் செய்யப் போகின்றோம். வாங்க அது என்ன குறிப்பு என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

ஒரு சிறிய பவுல் எடுத்துக்கோங்க. அதில் கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன், வெந்தய பொடி – 1 டேபிள் ஸ்பூன், அதிமதுரம் – 1 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று பொடியையும் போட்டு முதலில் ஒன்றாக கலந்து விடுங்கள். அதன் பின்பு இதை பேக்காக கலக்க தயிர் பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு தயிர் சேர்த்து கலந்து இந்த பேக்கை பயன்படுத்தும் போது ரிசல்ட் உடனடியாக நமக்கு கிடைக்கும். தயிர் எனக்கு செட்டாகாது என்பவர்கள் பால் சேர்க்கலாம். அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஆனால் சன் டேன் மூலமாக வந்த கருப்பு, தயிர் போட்டால் தான் சீக்கிரம் சரியாகும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த பேக்கை முகம் கழுத்து எல்லா இடங்களிலும் போட்டு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, அதன் பின்பு முகத்தை நனைத்து லேசாக மசாஜ் செய்து, கழுவி விட வேண்டும். பேக்கை போடுவதற்கு முன்பு முகத்தை சுத்தமாக கழுவிக்கோங்க. முகத்தில் மேக்கப் இருக்கக் கூடாது.

வாரத்தில் தொடர்ந்து 7 நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தி வந்தீர்கள் என்றால், ஏழாவது நாள் உங்களுடைய சருமத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். அதன் பின்பு வாரத்தில் இரண்டு நாள், அல்லது மூன்று நாள் இப்படி இந்த பேக்கை நீங்கள் தொடர்ந்து போட்டு வரலாம். உங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் கருத்தெட்டுகள் முகப்பருக்கள் தழும்புகள் எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கும்.

- Advertisement -

உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஆன ஸ்கின் இருந்தால் இதை ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்து விட்டு முகத்தில் போட்டுக் கொள்ளுங்கள். நிறைய கேரளத்து பெண்கள் அழகு குறிப்பில் இந்த அதிமது பொடியை பயன்படுத்துவார்கள். அதிமதுரப்படி வெந்தய பொடி இவை பொடியாக நமக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளுங்கள்.

நம்முடைய சருமம் நிரந்தரமாக பளபளப்பாக ஜொலிக்க வேண்டும். சுருக்கம் சீக்கிரத்தில் விழக்கூடாது என்றால் நாம் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும். காய்கறிகள் பழ வகைகள் இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். குறிப்பாக மனு அழுத்தம் இருக்கக் கூடாது. நம்முடைய சரும ஜொலி ஜொலிப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

- Advertisement -