
இன்றைய காலக்கட்டத்தில் இளம் தலைமுறைக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையே தங்களுடைய நிறத்தை அதிகரித்து காட்ட வேண்டும் என்பது தான். இப்படி கருப்பாக இருப்பவர்கள் யோசித்தால் பரவாயில்லை நல்ல நிறமாக இருப்பவர்களும் மேலும் நிறத்தை கூட்டிக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். இதற்காக பல ஆயிரங்களை செலவழித்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் தேவையில்லாத கெமிக்கல் கலந்த பொருட்களையும் பயன்படுத்தி முகத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். அப்படி எல்லாம் செய்யாமல் இயற்கையான முறையிலே அதுவும் ஒரே ஒரு முறை பயன்படுத்தும் போதே பல மடங்கு பலனை தரக் கூடிய ஒரு அற்புதமான பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு பதிவு தெரிந்து கொள்ள போகிறோம்.
முகத்தின் நிறத்தை அதிகரிக்க பாதாம் ஃபேஸ் பேக்
இந்த பேக் தயாரிக்க ஐந்து பாதாம் பருப்பை ஒரு பவுலில் போட்டு கொஞ்சமாக கொதிக்கும் தண்ணீரை ஊற்றி ஊற விடுங்கள். இது அரை மணி நேரம் ஊறினாலே பாதாம் பருப்பு நன்றாக ஊறி தோல் உரிந்து வந்து விடும். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும். அடுத்து இந்த பேக் தயாரிக்க ஒரு கப் பசும்பால், ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து, ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி இவை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இந்த பாத்திரம் காரம் இல்லாதாக எடுத்து கொள்ளுங்கள். இந்த பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் பாலை ஊற்றிய பிறகு உளுத்தம் பருப்பு பச்சரிசி ஊற வைத்த பாதாமை தோல் உரித்து அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீக்கு மாற்றி வைத்த பின் ஐந்து நிமிடம் வரை நன்றாக கலந்த விடுங்கள்.
ஐந்து நிமிடம் கழித்து இதை நன்றாக கலந்த பிறகு மூடி போட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடம் வேக விடுங்கள். இந்த நேரத்திற்குள்ளாக இதில் சேர்த்து இருக்கும் உளுந்து, அரிசி, பருப்பு அனைத்தும் நன்றாக வெந்து விடும். இதற்கு இடையில் ஒரு முறை மூடியை திறந்து கலந்து விடுங்கள் இல்லை என்றால் பால் அடிப்பிடித்து விடும். இது மொத்தமாக பத்து நிமிடம் கொதித்தால் போதும் இதில் இருக்கும் அனைத்து பொருட்களும் வெந்து விடும்.
அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை நன்றாக ஆற விட்ட பின் மிக்ஸி ஜாருக்கு மாற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டை ஒரு பவுலில் மாற்றி இத்துடன் ஒரு டீஸ்பூன் தயிரும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். முகத்திற்கு தேவையான பேக் தயாராகி விட்டது.
முதலில் உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். அதன் பிறகு ஈரம் இல்லாமல் துடைத்த பிறகு இந்த பேக்கை முகத்தில் போட்டு 10 நிமிடம் அப்படியே விட்டு விட்டால் நன்றாக காய்ந்து விடும். அதன் பிறகு கைகளை ஈரம் செய்து கொண்டு முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விட்டு பாருங்கள். முகம் முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு உங்களுடைய நிறம் கூடியிருக்கும்.
இதையும் படிக்கலாமே: வெயிலினால் உங்கள் முகம், கை, கால்கள் கறுத்து விட்டதா? அப்போ இந்த பேக்கை உபயோகப்படுத்தி பாருங்க. வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கி இயற்கையான நிறத்தை மீட்டுத் தரும்.
இதில் சேர்த்து இருக்கும் பாதாம் பால் அரிசி உளுந்து இவை அனைத்துமே நம்முடைய நிறத்தை அதிகரிக்கக் கூடியது. அது மட்டும் இன்றி இது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை முழுவதுமாக எடுத்து விடாது. இதனால் முகம் வறட்சி ஆகாமல் பொலிவாக இருப்பதுடன் இந்த பேக்கை போட்டு பிறகு அடிக்கடி இதை செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காது. மாதத்திற்கு ஒருமுறை இந்த பேக்கை போட்டால் போதும் அந்த மாதம் முழுவதுமே உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.