- Advertisement -

முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற உதவும் தீபம்

- Advertisement -

ஒருவருக்கு நேரம் நன்றாக இருக்கிறது, இருப்பினும் அவர்கள் தொட்டது எதுவுமே துலங்கவில்லை, எதை செய்தாலும் அதில் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது, சுப காரிய பேச்சுகள் எதுவும் வெற்றிகரமாக நடந்திடவில்லை என்னும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னோர்களின் சாபம் இருக்கிறது என்று அர்த்தம். முன்னோர்களின் சாபம் பெற்றவர்களால் எந்தவித முன்னேற்றமான நிலைக்கும் வர முடியாது. அப்படிப்பட்டவர்கள் அமாவாசை தினத்தில் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கு நிலை வாசலில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற தீபம்

எந்த அளவிற்கு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வழிபடுகிறோமோ, அதே போல் தான் மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அமாவாசை திதியில் நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய அனைத்து விதமான காரியங்களையும் செய்ய வேண்டும். முன்னோர்கள் யார் என்று தெரியாது என்பவர்கள் கூட இந்த வழிமுறையை பின்பற்றினால் தான் முன்னோர்களின் சாபம் முற்றிலும் நீங்கி அவர்களின் அருளை பெற முடியும். யார் என்ற பெயர் வேண்டுமானாலும் தெரியாமல் இருக்கலாம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் கண்டிப்பாக இருக்க தானே செய்வார்கள். யாராக இருந்தாலும் என்னுடைய முன்னோர்களுக்காக நான் இதை செய்கிறேன் என்று முழுமனதோடு செய்பவர்களுக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

- Advertisement -

இன்றைய அவசர உலகில் பலரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அமாவாசை திதி வரக்கூடிய நாளில் முன்னோர்களுக்காக சிறப்பாக சமையல் செய்வது அல்லது படையல் வைப்பது அல்லது திதி கொடுப்பது போன்ற எந்த காரியத்தையும் செய்ய இயலாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். இப்படி முன்னோர்களுக்குரிய எந்த காரியத்தையும் செய்யாமல் இருந்தோம் என்றால் அதனால் நமக்கு முன்னோர்களின் சாபம் ஏற்படும். இந்த சாபம் நமக்கு ஏற்படாமல் இருக்கவும் முன்னோர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கவும் முன்னோர்களை நினைத்து ஒரே ஒரு தீபத்தை நிலை வாசலில் ஏற்றி வைத்தாலே போதும்.

இந்த தீபத்தை ஜூன் மாதம் 25ஆம் தேதி காலையில் எப்பொழுது எழுகிறோமோ அப்பொழுது முகம் கை கால்களை கழுவி விட்டு வீட்டு நிலை வாசலுக்கு வெளியே ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு நல்லெண்ணையை தான் பயன்படுத்த வேண்டும். நம்முடைய நிலை வாசல் எந்த திசை பார்த்து இருக்கிறதோ அந்த திசை பார்த்து தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு அருகிலேயே ஒரு சுத்தமான டம்ளரில் நிறைக்குட தண்ணீரை வைக்க வேண்டும். மேலும் இதோடு ஏதாவது ஒரு இனிப்பு பொருளையும் ஒரு சிறிய கிண்ணத்திலோ, அகல் விளக்கிலோ அல்லது தட்டிலோ வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தீபம் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக எரிய வேண்டும். பிறகு இந்த தீபத்தை எடுத்து நாம் குளிர வைத்து விடலாம். தண்ணீர் மற்றும் இனிப்பு இவை இரண்டும் அப்படியே நிலை வாசலில் அமாவாசை முடியும் வரை இருக்கட்டும். மறுநாள் காலையில் இந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். அந்த இனிப்பு பொருளை எறும்புகள் இருக்கும் இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் நம் வீடு தேடி வரக்கூடிய முன்னோர்கள் இதை மனதார ஏற்றுக்கொண்டு நமக்கு அருளாசி புரிவார்கள்.

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீக்கும் அமாவாசை

நம்மால் இயன்ற பொருட்களை பிறருக்கு தானமாக தருவதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்பது உண்மை. அதே போல் ஒவ்வொரு அமாவாசை திதியிலும் முன்னோர்களை நினைத்து நாம் செய்யக்கூடிய காரியம் நம்முடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -