- Advertisement -
சமையல் குறிப்புகள்

மஸ்ரூம் மசாலா செய்வது எப்படி பார்ப்போம்

மஸ்ரூம் மசாலா அனைத்து டிபன் வகைகளுக்கும் பொருந்திய ஒன்று. குழந்தைகளுக்கு பிடித்த உணவாக மஸ்ரூம் உள்ளது. காளான் என்பதே மஸ்ரூம் ஆகும். இதனை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

மஸ்ரூம் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

காளான் – 250 கிராம்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
ஏலக்காய் – 3
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/ 2டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லி தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கருவேப்பிலை -சிறிதளவு
தக்காளி – 1

மஸ்ரூம் செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை, ஏலக்காய் மற்றும் சீரம் சேர்க்கவேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தினை அதனுடன் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- Advertisement -

பிறகு வெங்காயம் வதங்கியதும் நாம் வைத்துள்ள அணைத்து மசாலாவினையும் இதனுடன் சேர்க்கலாம். மசாலா அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு அதில் தக்காளி சேர்த்து அதனுடன் பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு மீண்டும் நன்றாக வதக்கவும்.

பிறகு அதில் காளான் சேர்த்து நன்றாக வேக விடவும். காளான் பாதி வந்த நிலையில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மஸ்ரூம் மசாலா தயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 25 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
பருப்பு குழம்பு செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mushroom masala recipe in Tamil. It is also called as Mushroom masala seimurai or Mushroom masala seivathu eppadi in Tamil or Mushroom masala preparation in Tamil.

- Advertisement -