- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பருப்பு குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்

பருப்பு குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்

- Advertisement -

அனைத்து கல்யாண வீடுகளிலும் தவறாமல் இடம்பெறும் குழம்பு வகைதான் இந்த பருப்பு குழம்பு. முழுவதுமாக பருப்பு கொண்டு இந்த குழம்பு தயார் ஆவதால் இது உடலுக்கு மிகவும் நல்லது. இதனை எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம் .

parupu_1

பருப்பு குழம்பு செய்ய தேவையான பொருட்கள் :

- Advertisement -

துவரம் பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 3 பல்
பச்சை மிளகாய் – 3
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதள்வு
கடுகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு

பருப்பு குழம்பு செய்முறை:

ஒரு குக்கரில் துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் தக்காளி போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்தூள் சேர்த்து 5 விசில் வரை வேகவிடவும்.

- Advertisement -

parupu_3

பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வைத்து கொள்ளவும். பிறகு பருப்பு வெந்தவுடன் தாளித்த இவற்றை அதில் கலந்து மீண்டும் 5 நிமிடம் வரை கொதிக்க விடவேண்டும்

parupu_2

பிறகு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பருப்பு குழம்பு தயார்.

- Advertisement -

parupu_4

சமைக்க ஆகும் நேரம் – 45 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
சுவையான குருமா செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Parupu kuzhambu recipe in Tamil. It is also called as Parupu kuzhambu seimurai or Parupu kuzhambu seivathu eppadi in Tamil or Parupu kuzhambu ingredients in Tamil.

சற்று முன்