
பெண்கள் அழகு போட்டு பார்ப்பதற்கு மட்டுமே நகைகள் வாங்கப்படுவது கிடையாது. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர், காசு இருக்கும் பொழுது நகைகளை வாங்குவதன் காரணம், தேவைப்படும் பொழுது அதை அடகு வைத்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் தான் இருக்கிறது. குடும்பத்திற்கு கவுரவத்தையும், பெண்களுக்கு அழகையும் கொடுக்கும் இந்த நகைகள் அடகு போகாமல் இருக்க, அடகு போன நகைகள் மீட்க வராகி அம்மனை எப்படி வழிபடலாம்? என்னும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை தான் ஆன்மீகம் சார்ந்த இப்பதிவின் மூலம் அறிய இருக்கிறோம்.
வராக ரூபம் எடுத்து இருக்கும் இந்த அம்மன் கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக பக்தர்களுக்கு அருள் ஆசிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார். கேட்ட வரம் கேட்டபடி கிடைக்க செய்யக் கூடிய வராஹி அம்மன் வழிபாடு நம் கஷ்டங்களையும், குறைகளையும் கேட்க காத்திருக்கிறது. அந்த வகையில் அடகு போகும் நகைகளை மீட்டெடுக்க வராஹி தயாரை எப்படி வழிபடலாம்? என்பதை பார்ப்போம்.
வராகி அம்மன் படத்தை வீட்டில் வைக்கலாமா? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். வராகி அம்மன் உக்கிர தெய்வம் கிடையாது. உக்கிர தெய்வங்களுடைய படத்தை தான் வீட்டில் வைப்பது முறையானது அல்ல! உக்கிர தெய்வங்கள் வீட்டில் இருந்தால், அந்த வீட்டில் மகாலட்சுமி அருள் கிடைப்பதில்லை. மகாலட்சுமி ரொம்பவும் மென்மையானவள், சாந்தஸ்வரூபினி எனவே ரத்தம் சொட்ட சொட்ட போர் புரியும் உக்கிர தெய்வங்களின் படத்தை வீட்டில் மாட்டி வைக்காதீர்கள்.
வராகி அம்மன் எதிரிகளையும், எதிர்மறை ஆற்றல்களையும் நம்மை விட்டு விலகியே வைத்திருக்கக் கூடியவள். பக்தர்களுக்கு தாயாக கேட்ட வரங்களை அள்ளிக் கொடுப்பவள். “ஓம் வராகி அம்மன் தாயே போற்றி” என்னும் இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து எந்த வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும். அரும்பாடு பட்டு வாங்கிய நகைகள் ஏதாவது ஒரு சிறு சிறு செலவுகளுக்காக அடகு வைத்து விடுகிறோம் அடகு வைத்து நகைகளை மீட்டெடுக்க செலவு செய்ததை விட நான்கு மடங்கு அதிகமாக போராட வேண்டி இருக்கும்.
பொதுவாக நகைகளை அடகு வைத்தால் அதற்கு சரியாக வட்டி ஆவது கட்ட வேண்டும். வட்டி கட்ட தவறினால் நீங்கள் அடகு வைத்த காரணத்தை விட அதிக உழைப்பின் பணத்தை கொடுக்க வேண்டி இருக்கும். அடிக்கடி நகை அடகு செல்லாமல் இருக்கவும், அடகிற்கு சென்ற நகைகள் மீட்டெடுக்கவும் ஒரு கண்ணாடி பௌலில் வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பை நிரப்பி வையுங்கள். அதன் மீது ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து மஞ்சளும், குங்குமமும் ஒவ்வொரு சிட்டிகை போடுங்கள். பின்பு உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு சிறிய நகையை அதில் சேர்த்து வராகி அம்மன் தாயார் முன்பு அமர்ந்து கைகூப்பி 108 முறை மேற்கூறிய வராகி அம்மன் மந்திரத்தை சொல்லி வேண்டுதல் வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:
வெற்றி தரும் அம்பாள் மந்திரம்
பிறகு கண்ணாடி பவுலில் இருக்கக் கூடிய கல் உப்பை நகை வைத்திருக்கும் இடத்திற்கு பக்கத்தில் கொண்டு போய் அப்படியே வையுங்கள். மறுநாள் உப்பில் இருக்கும் நகையையும், நாணயத்தையும் எடுத்து மற்ற நகைகளுடன் சேர்த்து வைத்துவிட்டு, உப்புடன் மற்ற பொருட்களையும் சேர்த்து தண்ணீரில் கரைத்து விடுங்கள். அவ்வளவுதான், தொடர்ந்து ஆறு வெள்ளிக் கிழமைகளில் இதை நீங்கள் செய்தால் அடகு வைத்த நகைகளை மீட்டு எடுக்கலாம். மீண்டும் அந்த நகைகள் அடகு போகாமலும் பாதுகாக்கலாம்.