- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றி தரும் அம்பாள் மந்திரம்

வெற்றி தரும் அம்பாள் மந்திரம்

- Advertisement -

காரண காரியம் இல்லாமல் இந்த உலகத்தில் எதுவுமே நடக்காது என்று சொல்லுவார்கள். அந்த வகையில் நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைவதும், தோல்வி அடைவதும் ஏதோ ஒரு காரண காரியத்தின் மூலமாகத்தான். கடவுள் நமக்கான நல்லதை எப்போது கொடுக்கணுமொ, அப்போது நிச்சயம் கொடுப்பான். நமக்கான கெடுதலை எப்போது கொடுக்க வேண்டுமோ அதையும் நிச்சயமாக கொடுத்து விடுகின்றான்.

நல்லதும் தீமையும் கலந்தது தான் இந்த வாழ்க்கை. வெற்றியும் தோல்வியும் சேர்ந்தது தான் இந்த வாழ்க்கை. இருப்பினும் ஒரு சில பேருக்கு இந்த நல்லது வாழ்க்கையில் சுத்தமாக நடக்காது. வெற்றி என்பது சிலருக்கு மட்டும் கைக்கு எட்டாக்கனியாக இருக்கும். வாழ்க்கை முழுவதும் கஷ்டம், தோல்வி தோல்வி தோல்வி, என்றே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு, வளரும் போதும் கஷ்டத்தை அனுபவித்து, இப்போது வாழ்க்கையில் ஒரு நிலையில்லாத தன்மையில் இருப்பார்கள்.

- Advertisement -

சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்ட நான், இப்போது சந்தோஷமாக வாழ்கிறேன் என்று சொன்னால் அது நியாயம். ஆனால் சிறு வயதிலும் கஷ்டம், இப்போது வளர்ந்த பின்பும் கஷ்டம் என்றால் என்ன நியாயம். ஆசைப்பட்ட படிப்பை படிக்கவில்லை, ஆசைப்பட்ட வேலை கிடைக்கவில்லை, ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லை, ஆசைப்பட்ட வீடு கிடைக்கவில்லை, ஆசைப்பட்ட பொன் பொருள் கிடைக்கவில்லை, ஆசைப்பட்ட ஒரு சிறு துரும்பு கூட இதுவரைக்கும் எனக்கு கிடைத்ததில்லை.

அப்படி இருக்கும் போது என்னுடைய வாழ்க்கையில் தோல்வி தோல்வி தோல்வி மட்டும் தான். இதிலிருந்து விடுபட நான் என்ன செய்வது. இதுவரை உங்களுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை எல்லாம் மறந்து விடுங்கள். கடந்து போகட்டும்.

- Advertisement -

இனி வரக்கூடிய காலகட்டத்தில் உங்களுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும் இந்த வழிபாட்டை செய்தால். விடாது அம்பாள் பாதத்தை தொடர்ந்து 48 நாட்கள் பிடிக்க வேண்டும். நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி வீட்டு பக்கத்தில் கட்டாயம் அம்மன் கோவில் இருக்கும். அதுவும் ஒரு கிராம தேவி, காவல் தெய்வமாக அந்த அம்மன் இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. ஊர் மாரியம்மன், ஊர் அங்காளம்மன் இப்படி எல்லாம் நிச்சயம் ஒரு ஊரில் ஒரு அம்மன் கோவில் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு அந்த கோவிலில் அமர்ந்து கொள்ளுங்கள்.

கோவிலிலேயே இருந்து கொண்டு அம்பாளை நம்பி ‘காரிய காரண நிர்முக்தா’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை கணக்கில்லாமல் சொல்லுங்கள். 5 நிமிடம், 10 நிமிடம் இப்படி மட்டும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிமிடத்திற்குள் உங்களால் இந்த மந்திரத்தை எத்தனை முறை மனதிற்குள் சொல்ல முடியுமோ, சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

- Advertisement -

கண்களை திறந்து அந்த அம்பாளை தரிசனம் செய்தபடி இந்த மந்திரத்தை சொல்லலாம். கண்களை மூடி மன கண்களால் அம்பாளை பார்த்து, மனதை ஒருநிலைப்படுத்தி அந்த கோவிலில் இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. எண்ணிக்கையில் கவனம் செலுத்தாதிங்க. ஐந்து நிமிடமும் பத்து நிமிடமுமோ, உங்களுக்கு ரொம்பவும் கவலை என்றால், அரை மணி நேரம் கூட அமர்ந்து அம்பாள் கோவிலில் இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லுங்கள்.

உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பமும் தோல்வியும் துவண்டு போய், காணாமல் போய்விடும். உங்கள் பின்னால் வெற்றி வருவதற்கு துவங்கும். நீங்கள் வெற்றிக்கு பின்னால் செல்ல வேண்டாம். அந்த வெற்றியே உங்களை பின்தொடரும் இந்த மந்திரத்திற்கு அவ்வளவு ஒரு சக்தி இருக்கிறது.

லலிதா சகஸ்ர நாமத்தில் வரக்கூடிய ஒரு மந்திர வார்த்தை இது. இது வெற்றிக்குரிய வார்த்தையாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அம்பாளே நீயே கெதி என்று சரணாகதியோடு எவர் ஒருவர் இந்த மந்திரத்தை சொல்கிறார்களோ அவர்களுடைய தலையெழுத்து நிச்சயம் மாறும். இதை 48 நாட்களில் நீங்கள் உணருவீர்கள். வழிபாடு செய்யக்கூடிய பெண்கள் மாதவிடாய் நாட்களை தவிர்த்து விட்டு 48 நாள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சொகுசு வாழ்க்கைக்கு சுக்கிர வழிபாடு

ஒரு கோரிக்கைக்காக தினமும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். அந்த கோரிக்கை வெற்றி அடைந்த பிறகு, அந்த கோரிக்கையில் உங்களுக்கு சக்சஸ் வந்த பிறகு, அடுத்த கோரிக்கைக்கு இந்த மந்திரத்தை பிரயோகப்படுத்திக் கொள்ளலாம். வீட்டில் அம்மன் படத்திற்கு முன்பு இந்த மந்திரத்தை சொல்லலாமா என்று கேட்டால் நிச்சயம் சொல்லலாம். தவறு கிடையாது. இருந்தாலும் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லும் போது வைப்ரேஷன் அதிகமாக வேலை செய்யும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் பெரும் வெற்றியை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்